• Nov 23 2024

காசை காலில் போட்டு மிதித்த யாழ். வர்த்தகர் தியாகி- வலுக்கும் கண்டனம்

Tamil nila / Jun 7th 2024, 10:25 pm
image

தியாகி அறக்கொடை  நிறுவனத்தின் ஸ்தாபகர்   வாமதேவா தியாகேந்திரன்  தன்னுடைய மகளின் 40 ஆவது பிறந்த தினத்தை  முன்னிட்டு  வறிய மக்களுக்கு  இன்றைய தினம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார். 

அந்த நிலையில் இன்று நாவலர் வீதியில் உள்ள அவரது அறக்கட்டளை அலுவலகத்தில் மக்கள் குவிந்திருந்தனர். இதனால் குறித்த வீதியும் முடக்கப்பட்டிருந்தது. 

இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்த வாமதேவன், ஜனாதிபதி என்றாலும் என்னை தேடித்தான் வரவேண்டும்- எதிர்வரும் 24 ஆம் திகதி என்னை சந்திக்க வருகிறார். நானாக எங்கும் போகமாட்டேன் என்னை அழைத்தால் தான் போவேன்- என்று தனது கருத்தை பதிவு செய்துகொண்டிருந்தார். அவர் நினைத்த அவளவு மக்கள் வரவில்லை இதனால் கவலையாக உள்ளது என்றார் பின்னர் திடீரென  தனது சட்டைப்பையில் இருந்து லட்சக்கணக்கான காசை எடுத்து நிலத்தில் போட்டு தன் காலால் மதித்தபடி நின்றார். இதை பார்த்த அனைவரும் சற்று நேரம் அதிர்ச்சியடைந்தனர். 

குறித்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. குறித்த காசை ஒருவர் எடுத்துக்கொடுத்த பின்னர் உதவி கேட்டு வத்தவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றார் - உதவி பெற வந்திருந்த சிலர் இந்த சம்பவத்தை பார்த்த பின்னர் அதை பெறாமல் திரும்பிச்சென்றதையும் அவதானிக்க முடிந்தது .

இலங்கை நாணயத்தாள்களை கால்களுக்குள் போட்டு அவமதித்த செயற்பாட்டுக்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.




காசை காலில் போட்டு மிதித்த யாழ். வர்த்தகர் தியாகி- வலுக்கும் கண்டனம் தியாகி அறக்கொடை  நிறுவனத்தின் ஸ்தாபகர்   வாமதேவா தியாகேந்திரன்  தன்னுடைய மகளின் 40 ஆவது பிறந்த தினத்தை  முன்னிட்டு  வறிய மக்களுக்கு  இன்றைய தினம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த நிலையில் இன்று நாவலர் வீதியில் உள்ள அவரது அறக்கட்டளை அலுவலகத்தில் மக்கள் குவிந்திருந்தனர். இதனால் குறித்த வீதியும் முடக்கப்பட்டிருந்தது. இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்த வாமதேவன், ஜனாதிபதி என்றாலும் என்னை தேடித்தான் வரவேண்டும்- எதிர்வரும் 24 ஆம் திகதி என்னை சந்திக்க வருகிறார். நானாக எங்கும் போகமாட்டேன் என்னை அழைத்தால் தான் போவேன்- என்று தனது கருத்தை பதிவு செய்துகொண்டிருந்தார். அவர் நினைத்த அவளவு மக்கள் வரவில்லை இதனால் கவலையாக உள்ளது என்றார் பின்னர் திடீரென  தனது சட்டைப்பையில் இருந்து லட்சக்கணக்கான காசை எடுத்து நிலத்தில் போட்டு தன் காலால் மதித்தபடி நின்றார். இதை பார்த்த அனைவரும் சற்று நேரம் அதிர்ச்சியடைந்தனர். குறித்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. குறித்த காசை ஒருவர் எடுத்துக்கொடுத்த பின்னர் உதவி கேட்டு வத்தவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றார் - உதவி பெற வந்திருந்த சிலர் இந்த சம்பவத்தை பார்த்த பின்னர் அதை பெறாமல் திரும்பிச்சென்றதையும் அவதானிக்க முடிந்தது .இலங்கை நாணயத்தாள்களை கால்களுக்குள் போட்டு அவமதித்த செயற்பாட்டுக்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement