வளிமண்டலத்தின் கீழ் வளிமண்டலத்தில் நிலவி வந்த குழப்பநிலை படிப்படியாக நீங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வளிமண்டலத்தில் நிலவி வந்த குழப்பநிலை தணிந்துள்ள போதிலும் இன்றையதினம் வடமேற்கு, சப்ரகமுவல்ல, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
இரவு அல்லது மாலை வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு சப்ரகமுவ காலி மாத்தறை மற்றும் வடக்கு மாகாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் தென்மேற்கு அல்லது மேற்கிலிருந்து காற்றோட்டம் பாய்வதால் அதில் கலந்துள்ள நீராவியினால் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
நல்ல காலநிலை நிலவினால் பொத்துவில் தொடக்கம் மன்னார் ஊடான கடற்பரப்பும் இடையிடையே மூடப்படும்
அதேவேளை, காற்றின் வேகம் மணிக்கு ஐம்பது அல்லது அறுபது கிலோமீட்டர்கள் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
வளிமண்டலத்தில் நிலவி வந்த குழப்பநிலை படிப்படியாக நீங்கி வருகிறது- அதுல கருணாநாயக்க தெரிவிப்பு. வளிமண்டலத்தின் கீழ் வளிமண்டலத்தில் நிலவி வந்த குழப்பநிலை படிப்படியாக நீங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வளிமண்டலத்தில் நிலவி வந்த குழப்பநிலை தணிந்துள்ள போதிலும் இன்றையதினம் வடமேற்கு, சப்ரகமுவல்ல, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். இரவு அல்லது மாலை வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு சப்ரகமுவ காலி மாத்தறை மற்றும் வடக்கு மாகாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தென்மேற்கு அல்லது மேற்கிலிருந்து காற்றோட்டம் பாய்வதால் அதில் கலந்துள்ள நீராவியினால் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.நல்ல காலநிலை நிலவினால் பொத்துவில் தொடக்கம் மன்னார் ஊடான கடற்பரப்பும் இடையிடையே மூடப்படும் அதேவேளை, காற்றின் வேகம் மணிக்கு ஐம்பது அல்லது அறுபது கிலோமீட்டர்கள் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.