• Dec 09 2024

Sharmi / Oct 14th 2024, 10:05 am
image

கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மீது ஜீப் வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.

பின்னர் ஜீப் வண்டியும் முன்னால் ஓடி வீதிக்கு அருகில் இருந்த வர்த்தகம் செய்யும் வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்தது.

சம்பவத்தில் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த  மூன்றரை வயதுடைய ஆண் குழந்தையே உயிரிழந்தது.

விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பளை விபத்தில் குழந்தை உயிரிழப்பு. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மீது ஜீப் வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.பின்னர் ஜீப் வண்டியும் முன்னால் ஓடி வீதிக்கு அருகில் இருந்த வர்த்தகம் செய்யும் வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்தது.சம்பவத்தில் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த  மூன்றரை வயதுடைய ஆண் குழந்தையே உயிரிழந்தது.விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement