• Mar 11 2025

தாய் தந்தையரின் நினைவாக வேளாண்மையை மாடுகளுக்கு தானம் செய்த தம்பதிகள்...! திருமலையில் நெகிழ்ச்சி...! samugammedia

Sharmi / Jan 10th 2024, 2:44 pm
image

மூன்று ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தாய் தந்தையரின் ஞாபகார்த்தமாக தானம் செய்த சம்பவமொன்று இன்று (10) பதிவாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியிலுள்ள கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் வேளாண்மை செய்து  பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்துள்ளார்.

மஹதிவுல்வெவ-திம்பிரிவெவ ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் ஆசிர்வாதத்துடன் சமய வழிபாட்டுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது கிராம மக்களும் கலந்து கொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மாடுகளையும் வேளாண்மை உண்பதற்காக கொண்டு வந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

தாய் தந்தையரின் நினைவாக வேளாண்மையை மாடுகளுக்கு தானம் செய்த தம்பதிகள். திருமலையில் நெகிழ்ச்சி. samugammedia மூன்று ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தாய் தந்தையரின் ஞாபகார்த்தமாக தானம் செய்த சம்பவமொன்று இன்று (10) பதிவாகியுள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியிலுள்ள கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு வருடமும் வேளாண்மை செய்து  பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்துள்ளார்.மஹதிவுல்வெவ-திம்பிரிவெவ ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் ஆசிர்வாதத்துடன் சமய வழிபாட்டுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது கிராம மக்களும் கலந்து கொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மாடுகளையும் வேளாண்மை உண்பதற்காக கொண்டு வந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement