• Nov 28 2024

500 ரூபா பணத்திற்காக நடந்த கொடூரம்; அண்ணனை கொலை செய்த தம்பி!

Chithra / May 29th 2024, 8:57 am
image

 

பாணந்துறை - பின்வத்த பகுதியில்500 ரூபா பணத்தை திருடி தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்வத்த, உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உபோசதாராம வீதியைச் சேர்ந்த ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதையடுத்து,

கடந்த 13 ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன், 

பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

500 ரூபா பணத்திற்காக நடந்த கொடூரம்; அண்ணனை கொலை செய்த தம்பி  பாணந்துறை - பின்வத்த பகுதியில்500 ரூபா பணத்தை திருடி தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்வத்த, உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.உபோசதாராம வீதியைச் சேர்ந்த ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.சந்தேகநபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதையடுத்து,கடந்த 13 ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன், பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement