• Jan 22 2025

விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற கப் வாகனம், 6 நாட்களின் பின் வாகனத்துடன் சாரதி கைது

Thansita / Jan 21st 2025, 8:20 pm
image

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தையும் சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் வந்த26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை கப் ரக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது . இதனையடுத்து போக்குவரத்து பொலிஸாரும்இபொலிஸாரும் இணைந்து நடத்திய 6 நாள் தொடர்ச்சியான தேடலில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் கண்டுபிடித்து சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியையும்ம் வாகனத்தையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலும் 

விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேவிபுரத்தை சேர்ந்த 27 வயதுடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்திற்குள்ளான இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற கப் வாகனம், 6 நாட்களின் பின் வாகனத்துடன் சாரதி கைது புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தையும் சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் வந்த26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை கப் ரக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்றுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது . இதனையடுத்து போக்குவரத்து பொலிஸாரும்இபொலிஸாரும் இணைந்து நடத்திய 6 நாள் தொடர்ச்சியான தேடலில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் கண்டுபிடித்து சாரதியையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சாரதியையும்ம் வாகனத்தையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலும் விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேவிபுரத்தை சேர்ந்த 27 வயதுடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்திற்குள்ளான இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement