• Oct 19 2024

உலகிற்கு, காத்திருக்கும் ஆபத்து - பேரழிவு ஏற்படும் அபாயம்! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 1:31 pm
image

Advertisement

உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை பேரழிவுக்கு இட்டுச்செல்லக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் இது தொடர்பில் எச்சரித்துள்ளார்.


உயர்ந்துவரும் கடல் மட்டத்தால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் புலம்பெயரும் நிலையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.


கடல்நீர் மட்டம் அதிகரிப்பதால் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் பாதிப்பு தீவுகளாக இருக்கும் சிறிய நாடுகளுக்கு மட்டுமல்ல.


பெரிய நாடுகளும் அதன் தாக்கத்தைச் சந்திக்க நேரிடும் என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

கரையோரப் பகுதிகளில் தற்போது வசிக்கும் சுமார் 900 மில்லியன் பேரின் வாழ்வாதாரத்திற்கு அது ஆபத்தை விளைவிக்கக்கூடும்.


பங்களாதேஷ், நெதர்லந்து, சீனா, இந்தியா முதலிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக குட்டெரெஸ் குறிப்பிட்டார்.


தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பைச் சீரமைக்க உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


மனித உரிமை, அகதிகள் நலன், எல்லைப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் தீர்வுகாண வேண்டும் என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலகிற்கு, காத்திருக்கும் ஆபத்து - பேரழிவு ஏற்படும் அபாயம் SamugamMedia உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை பேரழிவுக்கு இட்டுச்செல்லக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் இது தொடர்பில் எச்சரித்துள்ளார்.உயர்ந்துவரும் கடல் மட்டத்தால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் புலம்பெயரும் நிலையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.கடல்நீர் மட்டம் அதிகரிப்பதால் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் பாதிப்பு தீவுகளாக இருக்கும் சிறிய நாடுகளுக்கு மட்டுமல்ல.பெரிய நாடுகளும் அதன் தாக்கத்தைச் சந்திக்க நேரிடும் என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.கரையோரப் பகுதிகளில் தற்போது வசிக்கும் சுமார் 900 மில்லியன் பேரின் வாழ்வாதாரத்திற்கு அது ஆபத்தை விளைவிக்கக்கூடும்.பங்களாதேஷ், நெதர்லந்து, சீனா, இந்தியா முதலிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக குட்டெரெஸ் குறிப்பிட்டார்.தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பைச் சீரமைக்க உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.மனித உரிமை, அகதிகள் நலன், எல்லைப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் தீர்வுகாண வேண்டும் என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement