• Jan 19 2026

தந்தையின் பிரிவை தாங்காமல் தனுஷை கட்டியணைத்து அழுத ரோபோ சங்கரின் மகள்; ஓடிச் சென்று ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

Chithra / Sep 19th 2025, 8:39 am
image


பிரபல குணச்சித்திர நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகினரையடுத்து தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் மறைந்த செய்தியறிந்து வருந்தமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து அவருடன் நெருங்கி பழகிய நடிகரான தனுஷ் நேரிலேயே சென்று  இரங்கலை தெரிவித்துள்ளார். 

இதேவேளை சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத்துறை மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமுகர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவில்: “ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று தெரிவித்தார்

இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு இறுதியாக சிகிச்சை  பார்த்த  ஜெய் மருத்துவமனை அவர் எப்படி இறந்தார் என்றும் அவருடைய உயிர் எத்தனை மணிக்கு பிரிந்தது என்றும் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 

அதன்படி, ரோபோ சங்கர் செப்டம்பர் 16ஆம் தேதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குடலில் இரத்தப்போக்கு இருந்தது. மேலும் உள்ளுறுப்புகள் செயல் இழந்த நிலையில் வயிற்றுப் பகுதியிலும் மிகத் தீவிரமான பிரச்சனைகள் இருந்துள்ளன. 

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைகளை அழித்து வந்த போதும் பலன் கிடைக்கவில்லை. செப்டம்பர் 18ம் தேதி அன்று இரவு  9.05 க்கு அவரது உயிர் பிரிந்தது என ஜெய் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தந்தையின் பிரிவை தாங்காமல் தனுஷை கட்டியணைத்து அழுத ரோபோ சங்கரின் மகள்; ஓடிச் சென்று ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் பிரபல குணச்சித்திர நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகினரையடுத்து தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் மறைந்த செய்தியறிந்து வருந்தமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.இதையடுத்து அவருடன் நெருங்கி பழகிய நடிகரான தனுஷ் நேரிலேயே சென்று  இரங்கலை தெரிவித்துள்ளார். இதேவேளை சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.திரைப்படத்துறை மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமுகர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்: “ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று தெரிவித்தார்இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு இறுதியாக சிகிச்சை  பார்த்த  ஜெய் மருத்துவமனை அவர் எப்படி இறந்தார் என்றும் அவருடைய உயிர் எத்தனை மணிக்கு பிரிந்தது என்றும் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரோபோ சங்கர் செப்டம்பர் 16ஆம் தேதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குடலில் இரத்தப்போக்கு இருந்தது. மேலும் உள்ளுறுப்புகள் செயல் இழந்த நிலையில் வயிற்றுப் பகுதியிலும் மிகத் தீவிரமான பிரச்சனைகள் இருந்துள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைகளை அழித்து வந்த போதும் பலன் கிடைக்கவில்லை. செப்டம்பர் 18ம் தேதி அன்று இரவு  9.05 க்கு அவரது உயிர் பிரிந்தது என ஜெய் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement