• May 17 2024

மாப்பாண முதலியாரின் தீர்மானம்...! நல்லூரை புறக்கணித்த பிரதமர் மோடி...! நடந்தது என்ன? samugammedia

Sharmi / Oct 26th 2023, 2:00 pm
image

Advertisement

கடந்த 2015ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழிற்கு சென்றபோது வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லாதமைக்கான காரணம் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது யாழ் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடாமை தொடர்பில் பல முக்கிய விடயங்களை இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

நடராஜன் எழுதியுள்ள புதிய புத்தகம் ஒன்றிலேயே  மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்தின் போது நல்லூர் கோவிலுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பாண முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நல்லூர் ஆலயத்தினுள் செல்லவேண்டுமாயின் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். அதேவேளை குறிப்பிட்ட நேரத்தில்தான் கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்யமுடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனாலேயே பிரதமர் மோடியால் நல்லூர் முருகன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாப்பாண முதலியாரின் தீர்மானம். நல்லூரை புறக்கணித்த பிரதமர் மோடி. நடந்தது என்ன samugammedia கடந்த 2015ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழிற்கு சென்றபோது வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லாதமைக்கான காரணம் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது யாழ் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடாமை தொடர்பில் பல முக்கிய விடயங்களை இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் பகிரங்கப்படுத்தியுள்ளார். நடராஜன் எழுதியுள்ள புதிய புத்தகம் ஒன்றிலேயே  மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்தின் போது நல்லூர் கோவிலுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பாண முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்தினுள் செல்லவேண்டுமாயின் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். அதேவேளை குறிப்பிட்ட நேரத்தில்தான் கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்யமுடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனாலேயே பிரதமர் மோடியால் நல்லூர் முருகன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement