முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இன்று(27) விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் பிரிவுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் வீட்டில் ஒன்றுகூடிய முக்கியஸ்தர்கள். முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இன்று(27) விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் பிரிவுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.