• Dec 14 2024

அதிக வேகத்தில் இ.போ.ச பேருந்தை செலுத்தும் சாரதியின் அடாவடி தனம்...! பீதியடையும் பயணிகள்...!samugammedia

Sharmi / Dec 4th 2023, 3:58 pm
image

மஸ்கெலியா  நகரில் இருந்து காட்மோர் பகுதிக்கு சேவையில் ஈடுபட்டு வரும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து  குறித்த சாலையில் அதிக வேகத்தில் செலுத்தப்படுவதாகவும் இதனால்  குறித்த பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்  கர்ப்பிணி தாய்மார்கள், பாடசாலை பிள்ளைகள், முதியோர் பெரும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்களும் பயணிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாரதியின் கவனயீனத்தால் கடந்த மாதம் பாடசாலை செல்லும் மாணவி ஒருவர் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சாரதிக்கு எதிராக மாணவியின் பெற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.

மேலும், குறித்த பேருந்தின் சில்லுக்கு அகப்பட்டு  மல்லியப்பூ பகுதியில்  சில வளர்ப்பு நாய்கள் உயிர் இழந்து உள்ளதாகவும்  மேலும் மல்லியப்பு சந்தியை குறித்த பேருந்து செல்லும்போது பிரதான பாதைக்கு அருகில் சில வர்த்தக நிலையங்கள் ஆலயம் போன்ற கட்டிடங்கள் காணப்படும் அதனை கடந்தே பாடசாலை பிள்ளைகள் பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகளுக்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் பொழுது குறித்த பேருந்து அதிக வேகத்தில் செலுத்த படுவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து பலமுறை பிரதேச மக்களால் பேருந்தின் சாரதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த சாரதி இதன் காரணமாக பிரதேச மக்களிடமும் பயணிகளிடமும் அடாவடி தனத்தில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள மக்கள்  கோரிக்கை விடுத்தனர்.



அதிக வேகத்தில் இ.போ.ச பேருந்தை செலுத்தும் சாரதியின் அடாவடி தனம். பீதியடையும் பயணிகள்.samugammedia மஸ்கெலியா  நகரில் இருந்து காட்மோர் பகுதிக்கு சேவையில் ஈடுபட்டு வரும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து  குறித்த சாலையில் அதிக வேகத்தில் செலுத்தப்படுவதாகவும் இதனால்  குறித்த பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்  கர்ப்பிணி தாய்மார்கள், பாடசாலை பிள்ளைகள், முதியோர் பெரும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்களும் பயணிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.குறித்த சாரதியின் கவனயீனத்தால் கடந்த மாதம் பாடசாலை செல்லும் மாணவி ஒருவர் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சாரதிக்கு எதிராக மாணவியின் பெற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.மேலும், குறித்த பேருந்தின் சில்லுக்கு அகப்பட்டு  மல்லியப்பூ பகுதியில்  சில வளர்ப்பு நாய்கள் உயிர் இழந்து உள்ளதாகவும்  மேலும் மல்லியப்பு சந்தியை குறித்த பேருந்து செல்லும்போது பிரதான பாதைக்கு அருகில் சில வர்த்தக நிலையங்கள் ஆலயம் போன்ற கட்டிடங்கள் காணப்படும் அதனை கடந்தே பாடசாலை பிள்ளைகள் பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகளுக்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் பொழுது குறித்த பேருந்து அதிக வேகத்தில் செலுத்த படுவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.இது குறித்து பலமுறை பிரதேச மக்களால் பேருந்தின் சாரதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த சாரதி இதன் காரணமாக பிரதேச மக்களிடமும் பயணிகளிடமும் அடாவடி தனத்தில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள மக்கள்  கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement