• Sep 20 2024

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெட்கக்கேடானது...சபையில் சிரித்த லக்ஷ்மன் கிரியெல்ல!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 12:03 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றுக்கு அறியப்படுத்திய போதிலும், ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இது அரசாங்கத்தின் வெட்கக்கேடான செயல் என்றும் அவ்வளவு தூரம் இந்த அரசாங்கம் வங்குறோத்து நிலைக்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் வாக்கு உரிமை என்பது அடிப்படை மனித உரிமை என்றும் இதனை உறுதி செய்வது உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தலை பிற்போடுகிறோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தபோது மனித உரிமைகளை மீறுகின்ற செயற்காடாகவே அது அமைவதாக லக்ஷ்மன் கிரியெல்லகுறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்கள் தேர்தலை நடத்துவதற்கு உதவிபுரிய வேண்டும் அவ்வாறு உதவி செய்யாவிட்டால் அவர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை வழங்கமுடியும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெட்கக்கேடானது.சபையில் சிரித்த லக்ஷ்மன் கிரியெல்லSamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றுக்கு அறியப்படுத்திய போதிலும், ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இது அரசாங்கத்தின் வெட்கக்கேடான செயல் என்றும் அவ்வளவு தூரம் இந்த அரசாங்கம் வங்குறோத்து நிலைக்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.இதில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மக்களின் வாக்கு உரிமை என்பது அடிப்படை மனித உரிமை என்றும் இதனை உறுதி செய்வது உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.எனவே தேர்தலை பிற்போடுகிறோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தபோது மனித உரிமைகளை மீறுகின்ற செயற்காடாகவே அது அமைவதாக லக்ஷ்மன் கிரியெல்லகுறிப்பிட்டுள்ளார்.அரச நிறுவனங்கள் தேர்தலை நடத்துவதற்கு உதவிபுரிய வேண்டும் அவ்வாறு உதவி செய்யாவிட்டால் அவர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை வழங்கமுடியும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement