• May 06 2024

பாடசாலை மாணவர்களை புறக்கணித்த இ.போ.ச பேருந்து...! முகமாலை மக்கள் செய்த தரமான சம்பவம்...!

Sharmi / Mar 12th 2024, 1:28 pm
image

Advertisement

கிளிநொச்சியில் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றிய சம்பவம் இன்று(12)  பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.

குறித்த பிரச்சினை நீண்ட காலமாக தொடர்வதுடன் இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. 

இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது.

காலை 7.30 மணிக்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் தாமதமாக செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.

மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது. 

மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகின்றது.

இவ் விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.




பாடசாலை மாணவர்களை புறக்கணித்த இ.போ.ச பேருந்து. முகமாலை மக்கள் செய்த தரமான சம்பவம். கிளிநொச்சியில் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றிய சம்பவம் இன்று(12)  பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.குறித்த பிரச்சினை நீண்ட காலமாக தொடர்வதுடன் இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது.காலை 7.30 மணிக்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் தாமதமாக செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகின்றது.இவ் விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement