• Oct 06 2024

தமிழரசுக் கட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது...! சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு...!

Sharmi / Feb 28th 2024, 4:55 pm
image

Advertisement

தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 2017ம் ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.

இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நடக்கின்றது. அது உண்மையாகவே எம்மைப் பொறுத்தவரையில் அது ஒரு உட்கட்சி சம்பந்தமான விவகாரமாக அமைந்திருக்க வேண்டும். 

ஆனால் அது பூதாகாரப்படுத்தி இன்று அது நீதிமன்றம் வரை சென்ற ஒரு விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது. 

தமிழரசுக் கட்சி இல்லாவிட்டால் எஞ்சியது இல்லை என்ற ஒரு படம் காட்டப்படுவது போன்ற சூழல் தான் காட்டப்பட்டிருக்கிறது. 

தமிழரசுக் கட்சி எங்களை பொறுத்த வரையில் மிக மிக பலவீனமான சூழ்நிலைக்குள் சென்றுவிட்டது.

ஆகவே தமிழரசுக்கட்சியும் கூட சுருங்கிப்போயிருக்கிறது என்பதை தமிழரசுக்கட்சியில் இருக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நாங்கள் தாய் கட்சி என்றோ அல்லது நாங்கள் பெரிய கட்சி என்றோ வாதிடுவது மாத்திரமல்ல அங்கு ஒரு தலைமைப்பதவி என்ற ஒரு போட்டி கூட இருக்கிறது. 

எங்களை பொறுத்த வரையில் தமிழரசுக்கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

தமிழரசுக் கட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு. தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2017ம் ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நடக்கின்றது. அது உண்மையாகவே எம்மைப் பொறுத்தவரையில் அது ஒரு உட்கட்சி சம்பந்தமான விவகாரமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது பூதாகாரப்படுத்தி இன்று அது நீதிமன்றம் வரை சென்ற ஒரு விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சி இல்லாவிட்டால் எஞ்சியது இல்லை என்ற ஒரு படம் காட்டப்படுவது போன்ற சூழல் தான் காட்டப்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சி எங்களை பொறுத்த வரையில் மிக மிக பலவீனமான சூழ்நிலைக்குள் சென்றுவிட்டது.ஆகவே தமிழரசுக்கட்சியும் கூட சுருங்கிப்போயிருக்கிறது என்பதை தமிழரசுக்கட்சியில் இருக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தாய் கட்சி என்றோ அல்லது நாங்கள் பெரிய கட்சி என்றோ வாதிடுவது மாத்திரமல்ல அங்கு ஒரு தலைமைப்பதவி என்ற ஒரு போட்டி கூட இருக்கிறது. எங்களை பொறுத்த வரையில் தமிழரசுக்கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement