• Nov 19 2024

குஜராத்தில் இருந்து காரில் பயணம் - இரண்டரை மாதத்தின் பின்னர் லண்டனை சென்றடைந்த குடும்பத்தினர்

Tharun / Jul 16th 2024, 6:20 pm
image

குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான  காணொளிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 

1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த பழைய கார் 73 வருட பாரம்பரியம் கொண்டது. அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை பயணம் சென்று லண்டனை அடைந்துள்ளனர். 2½ மாத பயணம் மேற்கொண்ட அந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனை அடைந்த போது தங்களது வெற்றிப்பயணம் தொடர்பாக ஒரு வீடியோ தயாரித்துள்ளனர் 

இந்த காணொளியானது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுடன் தமன் தாக்கூரின் பதிவில், இது மிகவும் உணர்ச்சிகரமான பயணம். 73 நாட்களில் 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என பதிவிட்டுள்ளதுடன் அந்த வீடியோவில் அவர்கள் பயணத்தின் போது பல்வேறு இடங்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் இருந்து காரில் பயணம் - இரண்டரை மாதத்தின் பின்னர் லண்டனை சென்றடைந்த குடும்பத்தினர் குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான  காணொளிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த பழைய கார் 73 வருட பாரம்பரியம் கொண்டது. அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை பயணம் சென்று லண்டனை அடைந்துள்ளனர். 2½ மாத பயணம் மேற்கொண்ட அந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனை அடைந்த போது தங்களது வெற்றிப்பயணம் தொடர்பாக ஒரு வீடியோ தயாரித்துள்ளனர் இந்த காணொளியானது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுடன் தமன் தாக்கூரின் பதிவில், இது மிகவும் உணர்ச்சிகரமான பயணம். 73 நாட்களில் 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என பதிவிட்டுள்ளதுடன் அந்த வீடியோவில் அவர்கள் பயணத்தின் போது பல்வேறு இடங்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement