• Mar 16 2025

கச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு நடந்த கதி

Thansita / Mar 15th 2025, 10:31 pm
image

புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி அறுத்த சம்பவம் இடம்பெற்றது 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

நேற்று முன்தினம் (13) மாலை புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின்போது பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின்  தங்க சங்கிலியை அறுத்துள்ளார். 

அந்த நேரம் கடமையில் இருந்த பொலிஸார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை சந்தேகநபர் தனது முகவரியை மாறி மாறி  மூன்று இடங்களை பொலிஸாருக்கு கூறிய நிலையில் கச்சத்தீவுக்கு வருகை தந்த நீதவான் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 






கச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு நடந்த கதி புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி அறுத்த சம்பவம் இடம்பெற்றது இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (13) மாலை புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின்போது பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின்  தங்க சங்கிலியை அறுத்துள்ளார். அந்த நேரம் கடமையில் இருந்த பொலிஸார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை சந்தேகநபர் தனது முகவரியை மாறி மாறி  மூன்று இடங்களை பொலிஸாருக்கு கூறிய நிலையில் கச்சத்தீவுக்கு வருகை தந்த நீதவான் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

Advertisement

Advertisement

Advertisement