நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கமே காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் சார்பில் தமிழர் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் கொண்டிருக்கும் திறன் தொடர்பில் எனக்குச் சிறிதளவும் நம்பிக்கை இல்லை.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கமே காரணம்.
அதேவேளை ரணில் - மைத்திரி ஆட்சிக்காலத்தில் தான் நாட்டின் கடன் சுமை பலமடங்காக அதிகரித்தது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் பொதுத்தேர்தல் இடம் பெறும். பொதுஜன பெரமுன சொந்த வேட்பாளரையே நிறுத்தும். பொது வேட்பாளராக ரணிலை பெரமுன நிறுத்தாது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மைத்திரி- ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கமே காரணம். விக்னேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு.samugammedia நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கமே காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் சார்பில் தமிழர் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் கொண்டிருக்கும் திறன் தொடர்பில் எனக்குச் சிறிதளவும் நம்பிக்கை இல்லை.தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கமே காரணம்.அதேவேளை ரணில் - மைத்திரி ஆட்சிக்காலத்தில் தான் நாட்டின் கடன் சுமை பலமடங்காக அதிகரித்தது.அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் பொதுத்தேர்தல் இடம் பெறும். பொதுஜன பெரமுன சொந்த வேட்பாளரையே நிறுத்தும். பொது வேட்பாளராக ரணிலை பெரமுன நிறுத்தாது எனவும் தெரிவித்தார்.