தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலக அரங்கில் உயர்த்தும் முயற்சியில், ஆஸ்திரேலியாவில் முக்கியமான ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பினர், ஆஸ்திரேலிய மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகரை கான்பெரா நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.
இந்த சந்திப்பில், தமிழ் பாரம்பரிய கிராமியக் கலைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “கூத்தாடி” திரைப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
நிகழ்வின் போது TFAA சார்பில் இரவீ ஆனந்தராசா, “திரு” மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் ஆகியோர் எம்பி ஆஷ் அம்பிகைப்பாகருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, “கூத்தாடி” திரைப்படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான செல்வின் தாஸை, எம்பி ஆஷ் அம்பிகைப்பாகர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆஷ் அம்பிகைப்பாகர், “கூத்தாடி” திரைப்படம் தமிழர்களின் வேர்களையும் கிராமியக் கலை மரபுகளையும் மீண்டும் நினைவூட்டும் முக்கியமான படைப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், அழிந்து வரும் கூத்து மற்றும் நாடக மரபுகளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
இந்த முயற்சிக்கு செல்வின் தாஸ் மற்றும் TFAA அமைப்பிற்கு தனது முழு ஆதரவும் தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினர், தமிழ் கலாசாரத்திற்கு ஆதரவளிக்கும் ஆஷ் அம்பிகைப்பாகரின் இந்த நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
அதேவேளை, இந்த சந்திப்பு “கூத்தாடி” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்ட “கூத்தாடி” திரைப்படம் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலக அரங்கில் உயர்த்தும் முயற்சியில், ஆஸ்திரேலியாவில் முக்கியமான ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பினர், ஆஸ்திரேலிய மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகரை கான்பெரா நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.இந்த சந்திப்பில், தமிழ் பாரம்பரிய கிராமியக் கலைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “கூத்தாடி” திரைப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.நிகழ்வின் போது TFAA சார்பில் இரவீ ஆனந்தராசா, “திரு” மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் ஆகியோர் எம்பி ஆஷ் அம்பிகைப்பாகருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.அதனைத் தொடர்ந்து, “கூத்தாடி” திரைப்படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான செல்வின் தாஸை, எம்பி ஆஷ் அம்பிகைப்பாகர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.இந்நிகழ்வில் உரையாற்றிய ஆஷ் அம்பிகைப்பாகர், “கூத்தாடி” திரைப்படம் தமிழர்களின் வேர்களையும் கிராமியக் கலை மரபுகளையும் மீண்டும் நினைவூட்டும் முக்கியமான படைப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், அழிந்து வரும் கூத்து மற்றும் நாடக மரபுகளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.இந்த முயற்சிக்கு செல்வின் தாஸ் மற்றும் TFAA அமைப்பிற்கு தனது முழு ஆதரவும் தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினர், தமிழ் கலாசாரத்திற்கு ஆதரவளிக்கும் ஆஷ் அம்பிகைப்பாகரின் இந்த நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். அதேவேளை, இந்த சந்திப்பு “கூத்தாடி” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.