• Nov 23 2024

கிளிநொச்சியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கொடிவாரம் ஆரம்பம்...!

Sharmi / May 31st 2024, 4:16 pm
image

தேசிய போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிதின அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(31) காலை 8.30மணிக்கு நடைபெற்றது.

குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட பதில் சமுர்த்தி பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில், பழைய மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு  குறித்த கொடி வாரத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

முதலாவது கொடியினை மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் சங்க உறுப்பினர்களால் அணிவித்து கொடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த விருந்தினர்களைத் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தவர்களுக்கு கொடிகள் அணிவிக்கப்பட்டன.

மேலும், தொடர்ந்து பிரதேச செயலர் பிரிவுகளின் ஊடக தேசிய போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கொடி தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.

 "நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் : வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டி எழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்ற கொடிவாரம் மே31ம் திகதி தொடக்கம் ஜூன் 14ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.த. வினோதன், கிளி.மத்திய மகா வித்தியாலய அதிபர் ச.பூலோகராசா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் இரட்ணம் அமீன், கிளிநொச்சி மாவட்ட RAHAMA நிறுவன குழுத்தலைவர் M.H.வகீம்,  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



கிளிநொச்சியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கொடிவாரம் ஆரம்பம். தேசிய போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிதின அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(31) காலை 8.30மணிக்கு நடைபெற்றது.குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட பதில் சமுர்த்தி பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில், பழைய மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு  குறித்த கொடி வாரத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். முதலாவது கொடியினை மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் சங்க உறுப்பினர்களால் அணிவித்து கொடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.தொடர்ந்து இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த விருந்தினர்களைத் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தவர்களுக்கு கொடிகள் அணிவிக்கப்பட்டன.மேலும், தொடர்ந்து பிரதேச செயலர் பிரிவுகளின் ஊடக தேசிய போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கொடி தினம் முன்னெடுக்கப்படவுள்ளன. "நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் : வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டி எழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்ற கொடிவாரம் மே31ம் திகதி தொடக்கம் ஜூன் 14ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.த. வினோதன், கிளி.மத்திய மகா வித்தியாலய அதிபர் ச.பூலோகராசா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் இரட்ணம் அமீன், கிளிநொச்சி மாவட்ட RAHAMA நிறுவன குழுத்தலைவர் M.H.வகீம்,  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement