• Sep 30 2025

4ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; கஜேந்திரகுமார், சிறிதரன் எம்.பிக்கள் பங்கேற்பு

Chithra / Sep 28th 2025, 1:53 pm
image

 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

குறித்த போராட்டம் யாழ்.செம்மணியில் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கத்தினரும் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி  செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு நேற்றைய போலீசார் ராணுவத்தின் அடாவடித்தனத்திற்கும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் இன்று கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்


4ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; கஜேந்திரகுமார், சிறிதரன் எம்.பிக்கள் பங்கேற்பு  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.குறித்த போராட்டம் யாழ்.செம்மணியில் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.இன்றைய போராட்டத்தில் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கத்தினரும் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி  செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு நேற்றைய போலீசார் ராணுவத்தின் அடாவடித்தனத்திற்கும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் இன்று கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்

Advertisement

Advertisement

Advertisement