ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம் ஆனால் தற்போதைய ஆட்சியில் அவ்வாறு செயல்பட முடியாதுள்ளது என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எப்படியான சவால்கள் வந்தாலும் எமது நாட்டின் வீரம் மிகுந்த தலைவர்கள் தொடர்பிலும், சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பிலும் நாங்கள் கதைப்போம்.
ஏனெனில் பௌத்த சாசனத்தை அவர்கள் பாதுகாத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை.
வடக்கு, கிழக்கில் முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம். அதேபோல், தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம்.
ஆனால் தற்போது அவற்றின் மீதான பிடிமானங்களை இழந்துள்ளோம். இது தொடர்பாகக் கதைக்கும் போது எம்மை அரச எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர்.அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசு எமக்கு வழங்க வேண்டும் என்றார்.
அநுர ஆட்சியில் வடகிழக்கில் எம்மால் சுதந்திரமாக செயல்பட முடியாதுள்ளது - புலம்பும் அம்பிட்டிய தேரர் ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம் ஆனால் தற்போதைய ஆட்சியில் அவ்வாறு செயல்பட முடியாதுள்ளது என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எப்படியான சவால்கள் வந்தாலும் எமது நாட்டின் வீரம் மிகுந்த தலைவர்கள் தொடர்பிலும், சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பிலும் நாங்கள் கதைப்போம்.ஏனெனில் பௌத்த சாசனத்தை அவர்கள் பாதுகாத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை.வடக்கு, கிழக்கில் முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம். அதேபோல், தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம்.ஆனால் தற்போது அவற்றின் மீதான பிடிமானங்களை இழந்துள்ளோம். இது தொடர்பாகக் கதைக்கும் போது எம்மை அரச எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர்.அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசு எமக்கு வழங்க வேண்டும் என்றார்.