• Dec 17 2025

இலங்கையை புரட்டிப்போட்ட டித்வா புயலின் கோரம்: காணாமல்போகும் அபாயத்தில் இரு கிராமங்கள்!

Chithra / Dec 14th 2025, 9:26 am
image

 

டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையில் இரண்டு கிராமங்கள் காணாமல்போகக்கூடிய அபாயத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


லக்கல, அட்டன்வல மற்றும் ரத்னிந்த ஆகிய பாரம்பரிய கிராமங்கள் இலங்கை வரைபடத்திலிருந்து முற்றிலும் மறைந்து போகும் அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கபப்டுகின்றது.


நக்கல்ஸ் மழைக்காட்டுப் பகுதியில் உள்ள மானிகல மலைத் தொடருக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவுகளே இந்த அபாயத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.


ஆரம்பகட்ட புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த பாரம்பரிய கிராமங்கள் குடியிருப்பதற்கு பொருத்தமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்த இயற்கை அழகுக்குப் பெயர் பெற்ற மானிகல மலைத் தொடரின் அடிவாரத்தில் நிலம் பிளந்ததுடன், அட்டன்வல கிராமம் முழுமையாக அபாய நிலையில் சிக்கியுள்ளது.


அதேபோல் ரத்னிந்த கிராமமும் அபாயத்தில் இருப்பதாகவும், அப்பகுதி மக்களை வெளியேற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அட்டன்வல கிராமத்தில் 54 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதுடன், அங்கு 33 வீடுகள் காணப்படுகின்றன. ரத்னிந்த கிராமத்திலும் நிலப்பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையை புரட்டிப்போட்ட டித்வா புயலின் கோரம்: காணாமல்போகும் அபாயத்தில் இரு கிராமங்கள்  டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையில் இரண்டு கிராமங்கள் காணாமல்போகக்கூடிய அபாயத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.லக்கல, அட்டன்வல மற்றும் ரத்னிந்த ஆகிய பாரம்பரிய கிராமங்கள் இலங்கை வரைபடத்திலிருந்து முற்றிலும் மறைந்து போகும் அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கபப்டுகின்றது.நக்கல்ஸ் மழைக்காட்டுப் பகுதியில் உள்ள மானிகல மலைத் தொடருக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவுகளே இந்த அபாயத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.ஆரம்பகட்ட புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த பாரம்பரிய கிராமங்கள் குடியிருப்பதற்கு பொருத்தமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்த இயற்கை அழகுக்குப் பெயர் பெற்ற மானிகல மலைத் தொடரின் அடிவாரத்தில் நிலம் பிளந்ததுடன், அட்டன்வல கிராமம் முழுமையாக அபாய நிலையில் சிக்கியுள்ளது.அதேபோல் ரத்னிந்த கிராமமும் அபாயத்தில் இருப்பதாகவும், அப்பகுதி மக்களை வெளியேற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அட்டன்வல கிராமத்தில் 54 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதுடன், அங்கு 33 வீடுகள் காணப்படுகின்றன. ரத்னிந்த கிராமத்திலும் நிலப்பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement