• Oct 02 2024

கடும் மழைக்கு மத்தியிலும் ஆரம்பமானது க.பொ.த உயர்தரப்பரீட்சை...! samugammedia

Anaath / Jan 4th 2024, 12:44 pm
image

Advertisement

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று  (04) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2302 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.

இதே வேளை  கிளிநொச்சி மாவட்டத்திலும் பரீட்சைக்கு தோற்றுவோர்  விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.  

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில், 16 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு 2161 பரீட்சார்த்திகள் தோன்றுவார்கள் அவர்களில் 1268 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தனியார் விண்ணப்பதாரர்களில்  எண்ணிக்கை 893  பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இதேவேளை மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன.

அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்காக மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

கடும் மழைக்கு மத்தியிலும் ஆரம்பமானது க.பொ.த உயர்தரப்பரீட்சை. samugammedia க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று  (04) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2302 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.இதே வேளை  கிளிநொச்சி மாவட்டத்திலும் பரீட்சைக்கு தோற்றுவோர்  விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.  அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில், 16 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு 2161 பரீட்சார்த்திகள் தோன்றுவார்கள் அவர்களில் 1268 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் விண்ணப்பதாரர்களில்  எண்ணிக்கை 893  பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த இதேவேளை மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன.அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்காக மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement