• Sep 20 2024

சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம்..! கட்டுநாயக்கவில் பெண் ஒருவர் அதிரடியாக கைது..!

Chithra / Sep 28th 2023, 3:45 pm
image

Advertisement

 

இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது இன்று (28) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய இந்த பெண் அடிக்கடி விமானங்களில் பயணித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இன்று  அதிகாலை இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், அங்கு அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டார்.

587 கிராம் 316 மில்லிகிராம் எடையுள்ள இந்த நகைகள் அவர் கொண்டு வந்த சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் அவற்றை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த வர்த்தகப் பெண்ணிடம் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம். கட்டுநாயக்கவில் பெண் ஒருவர் அதிரடியாக கைது.  இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது இன்று (28) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய இந்த பெண் அடிக்கடி விமானங்களில் பயணித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.இன்று  அதிகாலை இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், அங்கு அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டார்.587 கிராம் 316 மில்லிகிராம் எடையுள்ள இந்த நகைகள் அவர் கொண்டு வந்த சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் அவற்றை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த வர்த்தகப் பெண்ணிடம் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement