• Sep 17 2024

முக்கிய நாடொன்றில் சிக்கல்....! நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்...! ஆயிரம் பேர் உயிரிழப்பு...! samugammedia

Sharmi / Sep 28th 2023, 3:43 pm
image

Advertisement

பங்களாதேஷில்  சமீபத்திய வாரங்களில்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

அதேவேளை, பங்களாதேஷில் வைத்தியசாலைகளிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கத்தினால் அன்றாடம் 20 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை, பங்களாதேஷின் 64 மாவட்டங்களிலும் டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளிகள் சிகிச்சைக்காக தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகளை திரண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


முக்கிய நாடொன்றில் சிக்கல். நிரம்பி வழியும் வைத்தியசாலைகள். ஆயிரம் பேர் உயிரிழப்பு. samugammedia பங்களாதேஷில்  சமீபத்திய வாரங்களில்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.அதேவேளை, பங்களாதேஷில் வைத்தியசாலைகளிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கத்தினால் அன்றாடம் 20 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.அதேவேளை, பங்களாதேஷின் 64 மாவட்டங்களிலும் டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளிகள் சிகிச்சைக்காக தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகளை திரண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement