• Sep 11 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த வெளிப்படையான விசாரணைகளுக்கு அரசாங்கமே தடையை உருவாக்கியுள்ளது! - எதிர்க்கட்சி விசனம்

Chithra / Sep 11th 2025, 8:34 am
image


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருக்கிறது  என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர அப்பதவியிலிருக்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை நியாயமாக முன்னெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு காணப்படுகிறது. 

இந்த விசாரணைகளின் போது அவர் சாட்சியமளித்திருக்கின்றார். அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் சாட்சியளித்திருக்கின்றனர். அந்த வகையில் விசாரணைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும் என அவர் எண்ணினால் நிச்சயம் பதவி விலகியிருப்பார்.


ஆனால் அவர் அதை செய்யாததன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தன. ஆனால் தற்போது நம்பிக்கையில்லா பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த பக்கசார்பற்ற விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் இந்த தீர்மானம் சவாலாக அமைந்துள்ளது. 

எவ்வாறிருப்பினும் நாம் இதனை கைவிடப் போவதில்லை. அரசாங்கத்தின் கூற்றிலுள்ள உண்மையை தன்மையும், அடிப்படையையும் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது என தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த வெளிப்படையான விசாரணைகளுக்கு அரசாங்கமே தடையை உருவாக்கியுள்ளது - எதிர்க்கட்சி விசனம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருக்கிறது  என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர அப்பதவியிலிருக்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை நியாயமாக முன்னெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு காணப்படுகிறது. இந்த விசாரணைகளின் போது அவர் சாட்சியமளித்திருக்கின்றார். அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் சாட்சியளித்திருக்கின்றனர். அந்த வகையில் விசாரணைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும் என அவர் எண்ணினால் நிச்சயம் பதவி விலகியிருப்பார்.ஆனால் அவர் அதை செய்யாததன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தன. ஆனால் தற்போது நம்பிக்கையில்லா பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த பக்கசார்பற்ற விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் இந்த தீர்மானம் சவாலாக அமைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாம் இதனை கைவிடப் போவதில்லை. அரசாங்கத்தின் கூற்றிலுள்ள உண்மையை தன்மையும், அடிப்படையையும் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement