புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்
பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியவில்லை.
மாறாக கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பூராகவும் 76 வருட காலம் தொடர்பிலேயே பேசிக்கொண்டுள்ளனர்.
அது மாத்திரமல்லாது புலிகளையும் புலம்பெயர் அமைப்பக்களையும் திருப்திப்படுத்தும்
நோக்கில் அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது.
அதற்காக யுத்தத்தை நிறைவூக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
தமிழ் பிரிவினைவாதத்தை விரும்பும் தரப்பினரை திருப்பதிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த விடயங்களை மேற்கொள்கின்றது.
அதற்காக அரசாங்கம் மகிந்தவின் பாதுகாப்பை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோன்று மக்களுக்கு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுக் கொண்டுள்ளது என சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்படும் அரசாங்கம் மொட்டு எம்.பி. குற்றச்சாட்டு புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியவில்லை.மாறாக கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பூராகவும் 76 வருட காலம் தொடர்பிலேயே பேசிக்கொண்டுள்ளனர்.அது மாத்திரமல்லாது புலிகளையும் புலம்பெயர் அமைப்பக்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது.அதற்காக யுத்தத்தை நிறைவூக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.தமிழ் பிரிவினைவாதத்தை விரும்பும் தரப்பினரை திருப்பதிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த விடயங்களை மேற்கொள்கின்றது.அதற்காக அரசாங்கம் மகிந்தவின் பாதுகாப்பை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோன்று மக்களுக்கு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுக் கொண்டுள்ளது என சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.