இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து கடலிலும்,தரையிலும் முன்னெடுத்த தமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(30) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது வரவேற்கத்தக்க விடயம்.
அதேவேளை இந்த கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை.
அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட ஒரு பகுதி இந்திய மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றிலே எதிர்வரும் சித்திரை மாதம் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதேவேளை, பாண்டிச்சேரி முதலமைச்சர் எமது கடற்றொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற ஒப்புதலை எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டு முதலமைச்சரும் தான் விரைவிலே எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பி வைப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் நற்குணம் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றி. நற்குணம் கருத்து. இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து கடலிலும்,தரையிலும் முன்னெடுத்த தமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(30) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்தற்போது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது வரவேற்கத்தக்க விடயம்.அதேவேளை இந்த கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை.அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட ஒரு பகுதி இந்திய மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றிலே எதிர்வரும் சித்திரை மாதம் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.அதேவேளை, பாண்டிச்சேரி முதலமைச்சர் எமது கடற்றொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற ஒப்புதலை எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.அத்துடன், தமிழ்நாட்டு முதலமைச்சரும் தான் விரைவிலே எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பி வைப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் நற்குணம் தெரிவித்துள்ளார்.