ராஜபக்ஷக்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்னை மையப்படுத்திய அமெரிக்க தடை அறிவிப்பின் உள்நோக்கமாக உள்ளது என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்கா எனது பெயரை உள்ளீர்த்து தடை விதித்தமைக்கு காரணம் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.
அதாவது அமெரிக்காவின் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இவர் அநுரகுமாரவுடன் பேச்சுக்களை நடத்தும்போது நாட்டுக்கு வெளியில் மோசடியான முறையில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதேநேரம் அவர்களுக்கு இன்னுமொரு தேவையும் உள்ளது.
அதாவது அநுர அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஸ்திரமற்ற நிலையில் தான் உள்ளார்கள்.
ஆகவே ராஜபக்ஷ குடும்பம் மீள் எழுச்சி கண்டுவிடும், ஆட்சிக்கு வந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
குறிப்பாக நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் தலைமுறையினர் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது.
இதன் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தை அடியோடு பலவீனப்படுத்தவேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனை அநுர அரசுக்கு ஒரு உதவியாகவே அமெரிக்கா செய்கின்றது. இதேபோன்றதொரு நிலைமை முன்பும் காணப்பட்டது.
ஆகவே, அமெரிக்காவின் தடை அறிவிப்பானது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல.
அந்த வகையில் குறித்த தடை அறிவிப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்யவுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.- என்றார்.
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியை தடுப்பதே அமெரிக்கத் தடையின் உள்நோக்கம் உதயங்க வீரதுங்க குற்றச்சாட்டு ராஜபக்ஷக்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்னை மையப்படுத்திய அமெரிக்க தடை அறிவிப்பின் உள்நோக்கமாக உள்ளது என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா எனது பெயரை உள்ளீர்த்து தடை விதித்தமைக்கு காரணம் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும். அதாவது அமெரிக்காவின் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவர் அநுரகுமாரவுடன் பேச்சுக்களை நடத்தும்போது நாட்டுக்கு வெளியில் மோசடியான முறையில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தார்.அதேநேரம் அவர்களுக்கு இன்னுமொரு தேவையும் உள்ளது. அதாவது அநுர அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஸ்திரமற்ற நிலையில் தான் உள்ளார்கள்.ஆகவே ராஜபக்ஷ குடும்பம் மீள் எழுச்சி கண்டுவிடும், ஆட்சிக்கு வந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. குறிப்பாக நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் தலைமுறையினர் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. இதன் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தை அடியோடு பலவீனப்படுத்தவேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனை அநுர அரசுக்கு ஒரு உதவியாகவே அமெரிக்கா செய்கின்றது. இதேபோன்றதொரு நிலைமை முன்பும் காணப்பட்டது. ஆகவே, அமெரிக்காவின் தடை அறிவிப்பானது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல.அந்த வகையில் குறித்த தடை அறிவிப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்யவுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.- என்றார்.