உத்தர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சியொன்றில் திடீரென சிறுத்தைப் புலியொன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் புத்தேஷ்வர் சாலை பகுதியில் நேற்றிரவு திருமண விருந்து நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது விருந்தினர்கள் உணவருந்திக்கொண்டிருந்த அறைக்குள் திடீரென சிறுத்தைப்புலியொன்று உள்நுழைந்துள்ளது.
இதனை பார்த்ததும் விருந்தினர்கள் அனைவரும் அச்சத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தப்பியோடினர். இத் தகவல் அறிந்ததும் மணமக்களும் பயத்தில் திருமண அரங்கில் இருந்து ஓடிச்சென்று காருக்குள் புகுந்து கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் சிறுத்தைப்புலியைப் பிடித்தனர். இதன்போது வன அதிகாரியொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது குறித்த வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். அரசில் காணப்படும் ஊழலால், வனத்தில் மனித ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இச் சம்பவம் வருத்தம் தருகிறது எனவும், இதனால் பொதுமக்களின் வாழ்வு ஆபத்தில் உள்ளது எனவும் இதுபற்றி ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது வந்தது சிறுத்தைப்புலியே அல்ல. ஒரு பெரிய அளவிலான பூனை என்று கூறி செய்தியையே மறைத்து விடுவார்களா? எனத் தெரியவில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.
திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி உத்தர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சியொன்றில் திடீரென சிறுத்தைப் புலியொன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் புத்தேஷ்வர் சாலை பகுதியில் நேற்றிரவு திருமண விருந்து நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது விருந்தினர்கள் உணவருந்திக்கொண்டிருந்த அறைக்குள் திடீரென சிறுத்தைப்புலியொன்று உள்நுழைந்துள்ளது.இதனை பார்த்ததும் விருந்தினர்கள் அனைவரும் அச்சத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தப்பியோடினர். இத் தகவல் அறிந்ததும் மணமக்களும் பயத்தில் திருமண அரங்கில் இருந்து ஓடிச்சென்று காருக்குள் புகுந்து கொண்டனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் சிறுத்தைப்புலியைப் பிடித்தனர். இதன்போது வன அதிகாரியொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இது குறித்த வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். அரசில் காணப்படும் ஊழலால், வனத்தில் மனித ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன் இச் சம்பவம் வருத்தம் தருகிறது எனவும், இதனால் பொதுமக்களின் வாழ்வு ஆபத்தில் உள்ளது எனவும் இதுபற்றி ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா அல்லது வந்தது சிறுத்தைப்புலியே அல்ல. ஒரு பெரிய அளவிலான பூனை என்று கூறி செய்தியையே மறைத்து விடுவார்களா எனத் தெரியவில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.