• Mar 18 2025

முன்னாள் சபாநாயகர் பதவி விலகி இரு மாதங்கள் – சமர்பிக்கப்படாத சான்றிதழ்கள்

Tharmini / Feb 13th 2025, 4:27 pm
image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான நாடாளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்து இரு மாதங்கள் பூரணமடைந்து விட்டன.

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் “கலாநிதி” பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தனது பட்டப்படிப்பை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி அசோக சபுமல் ரன்வல பதவி விலகினார். எனினும், தற்போது அவர் பதவி விலகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் கூட இதுவரையில் “கலாநிதி” சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

ஜப்பானில் உள்ள வசோதா பல்கழைக்கழகத்தில் தான் “கலாநிதி” பட்டப்படிப்பை நிறைவு செய்ததாகவும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் பட்டத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தாலும் கூட அவை தொடர்பில் எந்த சான்றிதழும் இதுவரையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை.

முன்னாள் சபாநாயகர் பதவி விலகி இரு மாதங்கள் – சமர்பிக்கப்படாத சான்றிதழ்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான நாடாளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்து இரு மாதங்கள் பூரணமடைந்து விட்டன.முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் “கலாநிதி” பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.தனது பட்டப்படிப்பை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி அசோக சபுமல் ரன்வல பதவி விலகினார். எனினும், தற்போது அவர் பதவி விலகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் கூட இதுவரையில் “கலாநிதி” சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.ஜப்பானில் உள்ள வசோதா பல்கழைக்கழகத்தில் தான் “கலாநிதி” பட்டப்படிப்பை நிறைவு செய்ததாகவும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் பட்டத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தாலும் கூட அவை தொடர்பில் எந்த சான்றிதழும் இதுவரையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement