தமிழீழத்துக்காக போராடிய விடுதலைப்புலிகளும் பேச்சுக்களுக்கான சந்தர்ப்பம் வரும்போது பேச தவறவில்லை. தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்களுக்கான பேசும் சந்தர்ப்பம் வரும் போது பேச வேண்டியது கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழீழத்துக்காக போராடிய விடுதலைப்புலிகள் கூட அரசாங்கத்துடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் வரும் போது பேசுவதற்கு தவறவில்லை. 1994ம் ஆண்டு 2001ம் ஆண்டுகளில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் வாக்குகளால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்ற எங்களுக்கும் அவ்வாறான பொறுப்பும் தார்மீக கடமையும் உள்ளது.
எமது பிரச்சனை தொடர்பாக நாம் எந்த உலக நாடுகளிடம் பேச செல்லும் போது அவர்கள் சொல்லும் கருத்து அரசாங்கத்துடன் பேசுமாறு அரசாங்கம் சரியோ பிழையோ அரசாங்கத்துடன் பேச வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பான எங்களுக்கு உண்டு .
ஜனாதிபதியுடன் 8ம் திகதி நடந்த சந்திப்பை தொடர்ந்து கடந்த 11ம் திகதி அதிகார பரவலாக்கம் தொடர்பான சந்திப்பு இடம்பெற்றது.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகத்திற்கான முன் மொழியை முன்வைத்த போது அதை ஜனாதிபதியும் முன் மொழிந்தார். அதை நாங்கள் நிராகரித்தோம்.
குறித்த கலந்துரையாடலில் மிக முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை. அதிகார பகிர்வு தொடர்பாக தொட்டு பார்க்கப்பட்டது. ஏற்கனவே இலங்கையின் சட்டத்திற்குற்பட்ட மாகாண சபைத்தேர்தலை உடனடியாக நடத்துமாறு எல்லா தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டது.
குறித்த தேர்தலை நடாத்தினால் அதிலிருந்தாவது ஆரம்ப புள்ளி முன்வைக்கப்படலாமா என்று கூட பேசப்பட்டது. இன்று தமிழர்களுக்கான தீர்வு சமஸ்டி என்பதிலிருந்து விட்டுக்கொடுத்தோ விலகியிருந்தோ பேசவில்லை.
முஸ்லீம் கட்சிகள் இணைக்கப்படவில்லை என்பது தவறானது. பேச்சுவார்த்தையில் அமைச்சர் நஸீர் அகமட்டும் இருந்தார்.
வடக்கு கிழக்கு இணைப்பு வரும் போது முஸ்லீம் மக்களுடன் சேர்ந்தாகவே வரும். அதுதான் கட்சியின் தலைவரின் நிலைப்பாடும்.
IMF நிதியைப் பெறுவதற்கான நாடகம் என்று கட்சிகள் மற்றும் பத்திரிகை எழுத்தாளர்கள் சொல்வது இருக்கலாம். இலங்கை பொருளாதார உதவியை பெறுவதற்கு உலக நாடுகள் சொல்கின்றன.
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்குமாறு அவ்வாறு தீர்க்க வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு இருக்கிறது. என தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அ.வேழமாலிகிதன், இராமநாதபுரம் வட்டார முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மு.சிவமோகம், கல்மடு நகர் வட்டார முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவன் வர்த்தகர்கள், கட்சி ஆதரவாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழீழத்துக்காக போராடிய விடுதலைப்புலிகளும் சந்தர்ப்பம் வரும்போது பேச தவறவில்லை சிறீதரன் எம்.பி. samugammedia தமிழீழத்துக்காக போராடிய விடுதலைப்புலிகளும் பேச்சுக்களுக்கான சந்தர்ப்பம் வரும்போது பேச தவறவில்லை. தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்களுக்கான பேசும் சந்தர்ப்பம் வரும் போது பேச வேண்டியது கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்,தமிழீழத்துக்காக போராடிய விடுதலைப்புலிகள் கூட அரசாங்கத்துடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் வரும் போது பேசுவதற்கு தவறவில்லை. 1994ம் ஆண்டு 2001ம் ஆண்டுகளில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர்.தமிழ் மக்களின் வாக்குகளால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்ற எங்களுக்கும் அவ்வாறான பொறுப்பும் தார்மீக கடமையும் உள்ளது.எமது பிரச்சனை தொடர்பாக நாம் எந்த உலக நாடுகளிடம் பேச செல்லும் போது அவர்கள் சொல்லும் கருத்து அரசாங்கத்துடன் பேசுமாறு அரசாங்கம் சரியோ பிழையோ அரசாங்கத்துடன் பேச வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பான எங்களுக்கு உண்டு .ஜனாதிபதியுடன் 8ம் திகதி நடந்த சந்திப்பை தொடர்ந்து கடந்த 11ம் திகதி அதிகார பரவலாக்கம் தொடர்பான சந்திப்பு இடம்பெற்றது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகத்திற்கான முன் மொழியை முன்வைத்த போது அதை ஜனாதிபதியும் முன் மொழிந்தார். அதை நாங்கள் நிராகரித்தோம். குறித்த கலந்துரையாடலில் மிக முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை. அதிகார பகிர்வு தொடர்பாக தொட்டு பார்க்கப்பட்டது. ஏற்கனவே இலங்கையின் சட்டத்திற்குற்பட்ட மாகாண சபைத்தேர்தலை உடனடியாக நடத்துமாறு எல்லா தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டது.குறித்த தேர்தலை நடாத்தினால் அதிலிருந்தாவது ஆரம்ப புள்ளி முன்வைக்கப்படலாமா என்று கூட பேசப்பட்டது. இன்று தமிழர்களுக்கான தீர்வு சமஸ்டி என்பதிலிருந்து விட்டுக்கொடுத்தோ விலகியிருந்தோ பேசவில்லை. முஸ்லீம் கட்சிகள் இணைக்கப்படவில்லை என்பது தவறானது. பேச்சுவார்த்தையில் அமைச்சர் நஸீர் அகமட்டும் இருந்தார். வடக்கு கிழக்கு இணைப்பு வரும் போது முஸ்லீம் மக்களுடன் சேர்ந்தாகவே வரும். அதுதான் கட்சியின் தலைவரின் நிலைப்பாடும்.IMF நிதியைப் பெறுவதற்கான நாடகம் என்று கட்சிகள் மற்றும் பத்திரிகை எழுத்தாளர்கள் சொல்வது இருக்கலாம். இலங்கை பொருளாதார உதவியை பெறுவதற்கு உலக நாடுகள் சொல்கின்றன.தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்குமாறு அவ்வாறு தீர்க்க வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு இருக்கிறது. என தெரிவித்தார். குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அ.வேழமாலிகிதன், இராமநாதபுரம் வட்டார முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மு.சிவமோகம், கல்மடு நகர் வட்டார முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவன் வர்த்தகர்கள், கட்சி ஆதரவாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.