• Nov 25 2024

ரணில் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கலந்துரையாடல் இன்று..!

Sharmi / Oct 14th 2024, 9:02 am
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினர் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பில் இன்று(14) ஒன்றுகூடவுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கொழும்பு - மலர் வீதியிலுள்ள பணிமனையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன் போது பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

தேசிய அரசியலில் தாம் மூன்றாவது இடத்தில் இருப்பதால் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதைவிட பலமான எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும் என்பது புதிய ஜனநாயக முன்னணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது.

எவ்வாறிருப்பினும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி பிரசாரங்களை முன்னெடுக்காமல், எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரை களமிறக்கினால் அது தமக்கு எதிர்மறையான ஒரு நிலவரத்தை ஏற்படுத்தும். 

எனவே பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பிறிதொரு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.

இதற்கமைய தினேஷ் குணவர்த்தனவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் அந்தத் தரப்பு முன்மொழிந்துள்ளது.

இது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்தார் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் பேச்சுகள் நடைபெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. 



ரணில் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கலந்துரையாடல் இன்று. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினர் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பில் இன்று(14) ஒன்றுகூடவுள்ளது.நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கொழும்பு - மலர் வீதியிலுள்ள பணிமனையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.இதன் போது பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.தேசிய அரசியலில் தாம் மூன்றாவது இடத்தில் இருப்பதால் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதைவிட பலமான எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும் என்பது புதிய ஜனநாயக முன்னணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது.எவ்வாறிருப்பினும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி பிரசாரங்களை முன்னெடுக்காமல், எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரை களமிறக்கினால் அது தமக்கு எதிர்மறையான ஒரு நிலவரத்தை ஏற்படுத்தும். எனவே பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பிறிதொரு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.இதற்கமைய தினேஷ் குணவர்த்தனவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் அந்தத் தரப்பு முன்மொழிந்துள்ளது.இது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்தார் என்றும் கூறப்படுகின்றது.இந்த நிலையிலேயே இன்றைய தினம் பேச்சுகள் நடைபெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement