• Sep 17 2024

சுதந்திரக் கட்சியின் முக்கிய குழுவினர் நாமலுக்கு ஆதரவு..!

Sharmi / Sep 5th 2024, 7:17 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(05) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பெருமளவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


சுதந்திரக் கட்சியின் முக்கிய குழுவினர் நாமலுக்கு ஆதரவு. ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று தீர்மானித்துள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(05) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பெருமளவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement