• Sep 17 2024

சுக்குநூறாக உடையும் நிலையில் தமிழரசுக் கட்சி- தமிழ் பொதுவேட்பாளரே சிறந்த முடிவு- குகநேசன் வலியுறுத்து..!

Sharmi / Sep 5th 2024, 7:10 pm
image

Advertisement

உடைவடையும் நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர் சிவபாதம் குகநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

உண்மையிலே தமிழரசு கட்சி கடந்த 75 ஆண்டு காலமாக தமிழ் மக்களிடையில் தமிழரசு கட்சி தனித்துவமான கட்சி என கூறப்பட்டு வந்த நிலையிலே, எடுக்கின்ற என்ன முடிவாக இருந்தாலும் தமிழரசு கட்சி எடுக்கின்ற முடிவுகளுக்கு அடிபணிந்து தங்களுடைய செயற்பாடுகளை செய்துகொண்டிருந்தது யாவரும் அறிந்த ஒன்று.

ஆனால் இன்றைய நிலையில் உண்மையிலே மன வேதனை அளிக்கின்ற விடயமாக இருக்கின்றது.

தமிழரசு கட்சியின் பல உறுப்பினர்கள் கடந்த கூட்டத்துக்கு போகாத நிலையிலும், தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் கடைசியும் முதலுமாக இறங்கிய நிலையில் இந்த  தமிழரசு கட்சி  முடிவு   எடுத்திருக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றார்கள். 

இறுதியாக  நடந்த பாராளுமன்ற தேர்தலிலே நான் தமிழரசு கட்சி  சார்பாக மூன்று பேருக்கு தெளிவாக தெட்ட தெளிவாக வேலை செய்திருந்தேன். வேலை செய்த இடங்களிலிருந்து பல முகவர்களூடாக பல கேள்விகள் எங்கள் மத்தியிலே எழுப்பப்படுகிறது. 

எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு பதில் கூற முடியாது தமிழரசு கட்சியாக நான் இருந்து கொண்டிருக்கின்றேன்.

உண்மையிலே தமிழ் மக்கள் விரும்புகின்ற ஒரு தனித்துவமான தன்னாட்சியை உருவாக்க வேண்டும் என்கின்ற  அடிப்படையிலேயே இந்த ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி 70 ஆண்டுகளாக தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு,  தமிழ் மக்களுக்காக நெறிப்படுத்தி, வளிப்படுத்தி தன்னுடைய காலப்பகுதியிலேயே ஒரு நிறைவான சேவையை ஆற்றி தமிழ் மக்களை கடவுள்தான் காக்க வேண்டும் என்ற இக்கட்டான கதையையும் கூறி தன்னுடைய காலத்தையும் முடித்துக் கொண்டார்.

அவ்வாறிருந்த சூழலிலே தமிழரசு கட்சியுடன் ஒன்றித்து பயணித்த மதிப்பான பெருந்தலைவர் மாவை சேனாதிராஜா சிறந்த முறையிலே தமிழரசு  கட்சியை பாரமெடுத்து சிறப்பான சேவையை ஆற்றியிருந்தார். 

இன்று தமிழரசு கட்சியால் எடுக்கப்பட்ட முடிவுகள் ஊடகங்கள் மூலம் பார்க்கின்ற போது மிக வேதனையாக இருக்கின்றது. 

உப தலைவர் கூட்டத்திலே கலந்து கொண்டிருந்தும் அவரிடம் ஊடகம் ஒன்று கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகின்ற பொழுது தான் அதற்கு உடன்பாடு இல்லை  என்ற வகையிலே எந்த வகையிலும் சஜித்துக்கு ஆதரவாக மேடையில் ஏற  மாட்டேன் என்ற வகையிலும் கூறியிருந்தார்.

ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து திடமான முடிவினை எடுத்திருக்க முடியும் என்கின்ற வகையிலே நிச்சயமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தோடு இருக்கின்றீர்கள். தமிழீழ விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று சற்றாக உடைக்கப்பட்டு இன்று தமிழ் மக்களுக்கான கட்சி என்று இருக்கின்ற தமிழரசுக் கட்சியும் இன்று சுக்கு நூறாக உடைக்கின்ற கட்சியாக எட்டியிருப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

இவ்வாறானதொரு சூழல் இருக்கின்ற பொழுது தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் இந்த குறுகிய காலத்தில் மீண்டும் தமிழ் மக்களுக்காக, தமிழ் இனத்துக்காக தமிழினத்தின் இறுதி முடிவுக்காக ஒருமித்த குரலில் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிக்க பணிக்க வேண்டும் என்பதை  என்னுடைய மக்கள் சார்பாக உங்களுக்கு பணிக்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

சுக்குநூறாக உடையும் நிலையில் தமிழரசுக் கட்சி- தமிழ் பொதுவேட்பாளரே சிறந்த முடிவு- குகநேசன் வலியுறுத்து. உடைவடையும் நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர் சிவபாதம் குகநேசன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையிலே தமிழரசு கட்சி கடந்த 75 ஆண்டு காலமாக தமிழ் மக்களிடையில் தமிழரசு கட்சி தனித்துவமான கட்சி என கூறப்பட்டு வந்த நிலையிலே, எடுக்கின்ற என்ன முடிவாக இருந்தாலும் தமிழரசு கட்சி எடுக்கின்ற முடிவுகளுக்கு அடிபணிந்து தங்களுடைய செயற்பாடுகளை செய்துகொண்டிருந்தது யாவரும் அறிந்த ஒன்று.ஆனால் இன்றைய நிலையில் உண்மையிலே மன வேதனை அளிக்கின்ற விடயமாக இருக்கின்றது. தமிழரசு கட்சியின் பல உறுப்பினர்கள் கடந்த கூட்டத்துக்கு போகாத நிலையிலும், தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் கடைசியும் முதலுமாக இறங்கிய நிலையில் இந்த  தமிழரசு கட்சி  முடிவு   எடுத்திருக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றார்கள். இறுதியாக  நடந்த பாராளுமன்ற தேர்தலிலே நான் தமிழரசு கட்சி  சார்பாக மூன்று பேருக்கு தெளிவாக தெட்ட தெளிவாக வேலை செய்திருந்தேன். வேலை செய்த இடங்களிலிருந்து பல முகவர்களூடாக பல கேள்விகள் எங்கள் மத்தியிலே எழுப்பப்படுகிறது. எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு பதில் கூற முடியாது தமிழரசு கட்சியாக நான் இருந்து கொண்டிருக்கின்றேன். உண்மையிலே தமிழ் மக்கள் விரும்புகின்ற ஒரு தனித்துவமான தன்னாட்சியை உருவாக்க வேண்டும் என்கின்ற  அடிப்படையிலேயே இந்த ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி 70 ஆண்டுகளாக தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு,  தமிழ் மக்களுக்காக நெறிப்படுத்தி, வளிப்படுத்தி தன்னுடைய காலப்பகுதியிலேயே ஒரு நிறைவான சேவையை ஆற்றி தமிழ் மக்களை கடவுள்தான் காக்க வேண்டும் என்ற இக்கட்டான கதையையும் கூறி தன்னுடைய காலத்தையும் முடித்துக் கொண்டார். அவ்வாறிருந்த சூழலிலே தமிழரசு கட்சியுடன் ஒன்றித்து பயணித்த மதிப்பான பெருந்தலைவர் மாவை சேனாதிராஜா சிறந்த முறையிலே தமிழரசு  கட்சியை பாரமெடுத்து சிறப்பான சேவையை ஆற்றியிருந்தார். இன்று தமிழரசு கட்சியால் எடுக்கப்பட்ட முடிவுகள் ஊடகங்கள் மூலம் பார்க்கின்ற போது மிக வேதனையாக இருக்கின்றது. உப தலைவர் கூட்டத்திலே கலந்து கொண்டிருந்தும் அவரிடம் ஊடகம் ஒன்று கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகின்ற பொழுது தான் அதற்கு உடன்பாடு இல்லை  என்ற வகையிலே எந்த வகையிலும் சஜித்துக்கு ஆதரவாக மேடையில் ஏற  மாட்டேன் என்ற வகையிலும் கூறியிருந்தார்.ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து திடமான முடிவினை எடுத்திருக்க முடியும் என்கின்ற வகையிலே நிச்சயமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தோடு இருக்கின்றீர்கள். தமிழீழ விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று சற்றாக உடைக்கப்பட்டு இன்று தமிழ் மக்களுக்கான கட்சி என்று இருக்கின்ற தமிழரசுக் கட்சியும் இன்று சுக்கு நூறாக உடைக்கின்ற கட்சியாக எட்டியிருப்பதை யாரும் மறுத்து விட முடியாது.இவ்வாறானதொரு சூழல் இருக்கின்ற பொழுது தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் இந்த குறுகிய காலத்தில் மீண்டும் தமிழ் மக்களுக்காக, தமிழ் இனத்துக்காக தமிழினத்தின் இறுதி முடிவுக்காக ஒருமித்த குரலில் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிக்க பணிக்க வேண்டும் என்பதை  என்னுடைய மக்கள் சார்பாக உங்களுக்கு பணிக்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement