• Sep 22 2024

மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் நிரந்தரமற்றவை என நாணய நிதியம் கூறியது -சம்பிக்க ரணவக்க! samugammedia

Tamil nila / Sep 29th 2023, 5:58 pm
image

Advertisement

நாட்டு மக்களுக்கு தற்போது கிடைத்து வரும் நிவாரணங்கள் நிரந்தரமானவை அல்ல என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வத்தளையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை இரண்டாவது தவணை கடனை வழங்க தீர்மானிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

இதற்கு முன்னர் நடந்த கூட்டம் ஒன்றில் செப்டம்பர் 27 ஆம் திகதி நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான முடிவு கிடைக்கும் என கூறினேன்.

இந்த வழியில் செல்லுங்கள் என்று சர்வதேச நாணய நிதியம் எமக்கு ஒரு வரைப்படத்தை வழங்கியுள்ளது. நாம் அந்த வழியில் பயணிக்கின்றோம்.

முதலாவது உடன்படிக்கை இந்த மாதத்துடன் முடிவடைகின்றது. அதன் முன்னேற்றத்துடன் நாம் புதிய உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும்.

அப்போதே சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணை கடன் கிடைக்கும். எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அப்படியான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடும் என்பதற்கான அறிகுறிகளை காண முடியவில்லை.

காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது தெளிவில்லை.

வருமானத்தை அதிகரிக்குமாறு நாணய நிதியம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்கவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாது. இலவச கல்வி, இலவச சுகாதாரம், நலன்புரி வசதிகள், சமூர்த்தி, அஸ்வெசும போன்றவற்றை செய்ய முடியாமல் போகும்.

வருமானத்தை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த வருமானத்தில் சுமார் 15 வீதம் கிடைக்கவில்லை.

இதனால், வருமானத்தை இலக்கை அடையவில்லை என்ற எச்சரிக்கையை விடுத்துடன் தாம் திருப்தியடையவில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் கூறியது.

தற்போதைய வரிசைகள் இல்லை என்ற அனைவரும் நினைப்பார்கள். எரிபொருள் இருக்கின்றது. 24 மணி நேரமும் மின் விநியோகம் கிடைக்கின்றது. எரிவாயு, உரம் கிடைக்கின்றது.

எனினும் இந்த நிவாரணங்கள் நிரந்தரமற்றவை என நாணய நிதியம் கூறுகிறது. நாடு உள்ளுக்குள் சரிந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக சுருங்கி வருகின்றது. இது சிறந்த எதிர்வுகூறல் அல்ல. சிகப்பு எச்சரிக்கை.

உலகில் எமக்கு கடன் வழங்கிய நாடுகள் உட்பட கடன் உரிமையாளர்கள் எம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஏனையோர் வழக்கு தொடர காத்திருக்கின்றனர்.

கடன் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும் வரை எமக்கு இரண்டாம் தவணை கடன் கிடைக்காது என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் நிரந்தரமற்றவை என நாணய நிதியம் கூறியது -சம்பிக்க ரணவக்க samugammedia நாட்டு மக்களுக்கு தற்போது கிடைத்து வரும் நிவாரணங்கள் நிரந்தரமானவை அல்ல என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.வத்தளையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.இலங்கை இரண்டாவது தவணை கடனை வழங்க தீர்மானிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.இதற்கு முன்னர் நடந்த கூட்டம் ஒன்றில் செப்டம்பர் 27 ஆம் திகதி நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான முடிவு கிடைக்கும் என கூறினேன்.இந்த வழியில் செல்லுங்கள் என்று சர்வதேச நாணய நிதியம் எமக்கு ஒரு வரைப்படத்தை வழங்கியுள்ளது. நாம் அந்த வழியில் பயணிக்கின்றோம்.முதலாவது உடன்படிக்கை இந்த மாதத்துடன் முடிவடைகின்றது. அதன் முன்னேற்றத்துடன் நாம் புதிய உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும்.அப்போதே சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணை கடன் கிடைக்கும். எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அப்படியான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடும் என்பதற்கான அறிகுறிகளை காண முடியவில்லை.காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது தெளிவில்லை.வருமானத்தை அதிகரிக்குமாறு நாணய நிதியம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தது.அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்கவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாது. இலவச கல்வி, இலவச சுகாதாரம், நலன்புரி வசதிகள், சமூர்த்தி, அஸ்வெசும போன்றவற்றை செய்ய முடியாமல் போகும்.வருமானத்தை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த வருமானத்தில் சுமார் 15 வீதம் கிடைக்கவில்லை.இதனால், வருமானத்தை இலக்கை அடையவில்லை என்ற எச்சரிக்கையை விடுத்துடன் தாம் திருப்தியடையவில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் கூறியது.தற்போதைய வரிசைகள் இல்லை என்ற அனைவரும் நினைப்பார்கள். எரிபொருள் இருக்கின்றது. 24 மணி நேரமும் மின் விநியோகம் கிடைக்கின்றது. எரிவாயு, உரம் கிடைக்கின்றது.எனினும் இந்த நிவாரணங்கள் நிரந்தரமற்றவை என நாணய நிதியம் கூறுகிறது. நாடு உள்ளுக்குள் சரிந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக சுருங்கி வருகின்றது. இது சிறந்த எதிர்வுகூறல் அல்ல. சிகப்பு எச்சரிக்கை.உலகில் எமக்கு கடன் வழங்கிய நாடுகள் உட்பட கடன் உரிமையாளர்கள் எம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஏனையோர் வழக்கு தொடர காத்திருக்கின்றனர்.கடன் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும் வரை எமக்கு இரண்டாம் தவணை கடன் கிடைக்காது என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement