• Nov 25 2024

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டிய தேவை! பேராசிரியர் தெரிவிப்பு

Chithra / Jan 22nd 2024, 1:17 pm
image

 

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு இப்போது நிஜமாகிவிட்டது. அதை புறக்கணிக்க முடியாது. செயற்கை நுண்ணறிவால் சுகாதாரத் துறைக்கும் மருத்துவக் கல்விக்கும் பல நன்மைகள் உள்ளன.

இது புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மருத்துவத்தின் தரத்தை அதிகரிக்க, சுகாதார சேவைகளின் செயல்திறன் மற்றும் தரம் என்பன கட்டாயமாகும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், தகவல்களின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் பற்றிய அறிவை ஒரு நபர் பெறுவது கடினம். அப்படிப்பட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் மிகுந்த பலன் கிடைக்கும்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க செயற்கை நுண்ணறிவின் கீழ் நாங்கள் சேவைகளை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டிய தேவை பேராசிரியர் தெரிவிப்பு  சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு இப்போது நிஜமாகிவிட்டது. அதை புறக்கணிக்க முடியாது. செயற்கை நுண்ணறிவால் சுகாதாரத் துறைக்கும் மருத்துவக் கல்விக்கும் பல நன்மைகள் உள்ளன.இது புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மருத்துவத்தின் தரத்தை அதிகரிக்க, சுகாதார சேவைகளின் செயல்திறன் மற்றும் தரம் என்பன கட்டாயமாகும்.தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், தகவல்களின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் பற்றிய அறிவை ஒரு நபர் பெறுவது கடினம். அப்படிப்பட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் மிகுந்த பலன் கிடைக்கும்.நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க செயற்கை நுண்ணறிவின் கீழ் நாங்கள் சேவைகளை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement