• Nov 22 2024

மருந்துகள் பற்றாக்குறைக்கு மத்தியில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் இலவச உணவிற்கும் ஆபத்து..!

Chithra / Jan 22nd 2024, 1:21 pm
image

 

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரச மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரச மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச உணவில் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக அதிகரிக்கும் கஸ்டங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதி பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள சுகாதார துறை அதிகாரிகள்,

தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்படும் கட்டண அதிகரிப்பு காரணமாகவே அதிகளவு மக்கள் அரசமருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது.

இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக தற்போதைய உணவு விநியோகம் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் 


மருந்துகள் பற்றாக்குறைக்கு மத்தியில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் இலவச உணவிற்கும் ஆபத்து.  உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரச மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரச மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச உணவில் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக அதிகரிக்கும் கஸ்டங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மருத்துவமனைகளில் அனுமதி பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள சுகாதார துறை அதிகாரிகள்,தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்படும் கட்டண அதிகரிப்பு காரணமாகவே அதிகளவு மக்கள் அரசமருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது.இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக தற்போதைய உணவு விநியோகம் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் 

Advertisement

Advertisement

Advertisement