• Mar 10 2026

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 5வது நாளாக தொடரும் சத்தியாகிரக போரட்டம்

Chithra / Feb 9th 2026, 9:18 am
image


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (09) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. 


முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள், வின்ச் இயந்திரப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 5ஆம் திகதி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


இந்நிலையில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவை தோல்வியடைந்த காரணத்தினால், இவ்வாறு தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறித்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


வின்ச் இயந்திரப் பயன்பாடு கரைவலை மீன்பிடி ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பானது என்றும், இது கடல் சுற்றாடலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கடற்றொழில் அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 5வது நாளாக தொடரும் சத்தியாகிரக போரட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (09) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள், வின்ச் இயந்திரப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 5ஆம் திகதி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.இந்நிலையில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவை தோல்வியடைந்த காரணத்தினால், இவ்வாறு தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறித்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.வின்ச் இயந்திரப் பயன்பாடு கரைவலை மீன்பிடி ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பானது என்றும், இது கடல் சுற்றாடலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கடற்றொழில் அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement