பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று(05) கூடியது.
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.
இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.
இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் கூடியது தமிழரசு கட்சியின் நியமனக் குழு. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று(05) கூடியது.நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.குறித்த கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.