இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்,
குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு லட்சத்துக்கு 62 ஆயிரம் (162,000) நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன்,
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 3 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் ஹெரோயினுக்கும், 3 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையாதல் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு லட்சத்துக்கு 62 ஆயிரம் (162,000) நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன்,2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 3 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் ஹெரோயினுக்கும், 3 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.மேலும், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையாதல் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.