• Nov 23 2024

தமிழர்களுக்குரிய ஒரே ஒரு தீர்வு தேர்தல்களை பகிஸ்கரிப்பது மட்டுமே - கஜேந்திரகுமார் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 27th 2023, 7:32 pm
image

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய பெயர் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

அனைத்துக் கட்சிகளும் இணங்கினால் தான் ஒரு வேட்பாளராக வர தயார் என்று ஏனையவர்கள் ஒரு வேட்பாளர் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. முக்கியமாக நான் நினைக்கின்றேன் ஈ பி ஆர் எல் எப்   தரப்பின் தலைவர் அந்த அணியை சார்ந்தவர்கள் மற்றும் இன்னுமொரு அணி மனோகணேசன் அவர்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் ஊடகங்கள் எம்மிடம் தொடர்ச்சியாக எங்களுடைய நிலைப்பாட்டை கேட்டிருக்கின்ற நிலையில் நாங்கள் இது தொடர்பாக ஒரு சில கருத்துக்களை பகிரங்கப்படுத்த விரும்புகின்றோம்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்கள தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அந்த சிங்கள தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்பு கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம் அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம். தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம். இது அனைத்து சம்பந்தமாக அந்த சிங்கள தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது.

தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் அனைவரும் ஒற்றைய ஆட்சியை வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலே தொடர்ச்சியாக இருக்கின்றனர். வெளிப்படையாகவே வந்து 13ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதாக இருப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒற்றைய ஆட்சிக்குள் மட்டும் தான் தீர்வு அல்லது இருக்கும் 13 ஆம் திருத்தத்தின் பெயரில் இருக்கின்ற விடயங்களில் கழித்து சொல்லுகின்ற விடயம் மட்டும்தான் இருக்கின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் மக்களினுடைய வாக்குகள் இந்த தரப்புக்கு போக முடியாது என்கின்ற ஒரு முடிவில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவு. சிங்கள தரப்பில் இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு இருக்கின்றனர்.

அந்த ஒரு பின்னணியில் தான் இன்று இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துகின்ற கதை ஒன்று திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடைய உண்மையான நோக்கத்தினை நான் தெளிவாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அதில் ஒரு சிலர் மிகத் தெளிவாக வெளிப்படையாகவும் கூறி இருக்கின்றனர்.

ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் முதல் வட்டத்தில் ஒரு சிங்கள வேட்பாளர் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். இரண்டாம் வாக்கெடுப்பில் வேட்பாளர் தெரிவு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்கள் பேரம் பேசுவதற்கு முன் வருவர். அப்போது நாங்கள் பேரம் பேசி ஒரு தரப்பினை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை எடுக்கலாம்.ஆதரிப்பது தான் அவர்களுடைய நோக்கம். 

அதனை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று சொல்கின்ற உத்தி இறுதியில் ஒரு சிங்கள தரப்பை நான் இவ்வளவு காலமும் கூறிக் கொண்டு வந்த அனைவரும் எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூறுகள் சம்பந்தமான விடயமாக இருக்கலாம் எங்களுடைய மண் திட்டமிட்டு பறிபோகின்ற நிலைமையை உருவாக்கின தரப்பாக இருக்கலாம் அல்லது ஆதரிக்கின்ற சிறப்பாக இருக்கலாம் அப்படித்தான் இன்று நிலைமை இவை அனைத்தும் சிங்கள வேட்பாளர் யாராக இருந்தாலும் அதுதான் நிலைப்பாடு.

அவ்வாறான ஒரு சூழலில் இறுதியில் பேரம் பேசுகின்ற என்ற பெயரில் வந்து இந்த நிலைப்பாட்டில் இருக்கின்ற ஒருவரை ஆதரிப்பது தான் இறுதி முடிவாக இருக்கும் அது முதலாவது.

இரண்டாவது விடயம் இந்த தமிழ் தரப்புகள் யார் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கதைக்கின்ற தமிழ் தரப்புகள் யார் இன்று 35 வருடங்களுக்கு மேலாக தோற்றுப்போன ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை வலியுறுத்துபவர்கள் வேறு எதைப் பற்றியும் கதைப்பதற்கு தயாரில்லை என்று கூட பேரம் பேசக்கூடிய சூழல் இருக்க இலங்கை அரசு இன்று உலகத்தில் பணத்திற்கு கெஞ்ச வேண்டிய நிலை ஏன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கெஞ்ச வேண்டி இருக்கின்றது அவ்வாறான ஒரு சூழலிலும் கூட 13 ஆம் திருத்தத்தை வலியுறுத்தி தான் இன்று பேச்சு வார்த்தைகளில் இதுவரைக்கும் ரணில் விக்ரமசிங்கவிடம் பேசுகின்றனர்.

அங்கு வேறு எதைப் பற்றியும் கலைக்கவில்லை இவைகளா பேரம் பேசப் போகின்றனர் இந்த தரப்பினை தமிழ் மக்களுக்காக வேட்பாளர்களுடன் உண்மையிலேயே நேர்மையாக வந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இறுதி தீர்வு சம்பந்தமாக பேரம் பேசப் போகின்றார்கள் அப்போது இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் அரசியல்களை முடக்குவதற்கான விலை போய் இருக்கின்ற தமிழ் தரப்புகள் தான் இன்று ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

இதையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் கூறுகின்ற தரப்பினரும் படு பிழையான தரப்பு தமிழ் இனத்தினுடைய அரசியல் அவிலாசைகளை ஒற்றை ஆட்சிக்குள் முடக்குகின்ற 13 ஆம் திருத்தத்துக்குள் முடக்குகின்ற திணிக்கின்ற ஒரு தமிழ் தரப்பும் வாக்களிக்க போகின்றோம் என பேசி ஒரு தரப்பினை ஆதரிக்க போகின்ற தரப்பினரை பார்த்தாலும் முற்றுமுழுதாக தமிழர்களுடைய இன அழிப்புக்கு இன்றைக்கும் நியாயப்படுத்தி அதற்கு துணை போகின்ற அல்லாஹ்விடில் அவற்றை செய்விக்கின்ற தரப்பாக தான் இருக்கின்றது.

உண்மையிலே சொன்னால் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தேர்வுதான் இருக்கின்றது இந்த தேர்தலை பகிஷ்கரிப்பது நாங்கள் கடந்த 29ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த பகிஷ்கரிப்பு என்கின்ற விடயத்தை ஒவ்வொரு முறையும் அதன் ஊடாக உலகத்திற்கு சொல்லக்கூடிய சிங்கள தேசத்திற்கும் சொல்லக் கூடிய ஒரு தெளிவான செய்தியை வலியுறுத்தியும் துரதிஷ்டவசமாக எங்களுடைய மக்கள் நாங்கள் சொல்கின்ற அந்தக் கருத்தின் உடைய ஆழத்தினை விளங்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் இந்த போலியான கதைகளுக்கு விலை போய் அல்லது ஏமாற்றப்பட்டு எங்களது மக்கள் வாக்குகளை அள்ளி வழங்குகின்றனர்.

கடைசியில் முகக்குப் பெற விழுந்ததும் மாத்திரம்தான் மிகுதி முழுவதும் நமது வயிற்றிலே அடித்தனர் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு முறையும் எங்களை ஏமாற்றியுள்ளனர் இனியாவது அனைத்து தரப்பினாலும் ஏமாற்றப்பட்டு இம்முறையும் சென்று யாரையும் நம்பி வாக்களிக்க போவோமாக இருந்தால் ஏமாற்றப்படுவது இரண்டாம் கட்டமாக தான் இருக்கப் போகின்றது.

இதுதான் எங்களுடைய முடிவா எங்களுடைய மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு இந்த தேர்தலை பாகிஸ்தரிப்பது மட்டும்தான் எங்களுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு தெரிவு என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு விடயம் நாங்கள் ஒரு வேட்பாளரை நிறுத்துவதாயின் அந்த வேட்பாளர் யார் அப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை நிறுத்தப் போகின்றோம் ஆக இருந்தால் இன்றைக்கு அரசியல் அரங்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை மற்றவர் முழு பேரும் தமிழ் மக்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவராகத்தான் இருக்கின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஏமாற்றுகின்ற தலைவராகத்தான் இருக்கின்றனர்.

விக்னேஸ்வரனை எடுத்துக் கொண்டால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் ரணில் தான் எங்களை காப்பாற்ற போகின்றார் என பேசிக்கொண்டு இருந்தவர் ரணிலே ஆதரிக்க வேண்டும் என கூறியவர் இன்று ஒரு வேட்பாளராக வருவதற்கு இல்லை இல்லை ரணில் ஏமாற்றி விட்டார் எனக்கு கூறுகின்றார் நாளை மீண்டும் அந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அவர் தயங்க போவதில்லை.

2016ல் ஒற்றைய ஆட்சிக்குள்ளே தமிழ் அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடக்கப் போகின்ற என்று சொன்ன விக்னேஸ்வரன் தான் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதற்கு சேர்ந்து அந்த ஒற்றை ஆட்சி திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவைய னால் தயாரிக்கப்பட்ட முழுமையான சமஷ்டி கூறிய தமிழ் தேசத்தை தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சமஸ்டி தீர்வை தயாரித்து அந்த தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டத்தை இறுதி நேரத்தில் கை கூடுவதற்கு தயாராக இருக்கவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் பிறவை உருவாக்குவதற்கு ஒற்றை ஆட்சியை முறியடிக்க வேண்டும் 13ம் திருத்தத்திற்குள் கொண்டு சென்று தமிழ அரசியலை முடக்குவதை முறியடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கினார் இன்று அதே விக்னேஸ்வரன் தான் டெல்லிக்கு கடிதம் எழுதுகின்றார் இந்த 13 ஆம் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று.

இவ்வாறான தரப்புகள் தான் தமிழ் மக்களினுடைய வேட்பாளராக வர போகின்றார்கள் என்றால் நீங்கள் நினைக்கின்றீர்களோ தமிழ் மக்கள் அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று அந்த அளவு தூரத்திற்கு எமது மக்கள் முட்டாள்களோ ஆகவே நாங்கள் நிறுத்தப் போகின்ற வேட்பாளர் இன்றைக்கு தமிழ் மக்களால் நம்பக்கூடிய ஒரு வேட்பாளராக இருக்கப் போவதில்லை.

அவ்வாறாயின் என்ன செய்தியை கொடுக்கப் போகின்றோம் ஒரு தெளிவான இந்த தேர்தலில் தெளிவான செய்தியை தமிழ் மக்கள் கொடுப்பதற்கு தயார் என்ற மனோ நிலையில் இருக்க தேவையில்லாமல் நிராகரிக்கப்படுகின்ற அல்லது மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக அந்த தெளிவான செய்தியை மறுப்பதற்கு அதனை எவ்வாறாயினும் குழப்புவதற்காக இந்த வேலை திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திரும்பவும் மக்கள் ஒற்றுமையாக தேர்தலை பகிஷ்கரிக்க கூடிய தெளிவான செய்தியை கொடுக்கக்கூடிய சூழலை எப்படி என்றாலும் குழப்புவதற்காக தான் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்களினுடைய அரசியல் காட்சிகள் ஒன்று இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கின்ற ஒரு தேவையும் உண்மையில் கிடையாது தேவை எங்கு இருக்கின்றது என்றால் தமிழ் மக்கள் தெளிவாக சரியான தரப்பிற்கு பின்னால் ஒன்றிணைக்க வேண்டும் அதுதான் உண்மையான தேவை.

தமிழ் மக்கள் தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத்தினுடைய போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக யார் சரி யார் நேர்மை யார் இல்லை என்று படிப்பதற்கு காலம் கிடைத்து இருக்கின்றது இந்த தரப்புகள் புதிதாக உருவாகின்ற தரப்புகள் அல்ல 15 வருடங்களாக இருந்த அதே தரப்புகள் தான் தொடர்ந்து இருக்கின்றது அதில் யார் சரியாக நேர்மையாக யார் கதைகளை மாற்றாமல் நடந்து கொள்வது அன்றிலிருந்து இன்று வரைக்கும் யார் ஒரே நிலைப்பாடு இருந்து உண்மையை கூறி இன்று அந்த உண்மைகள் நிரூபிக்கப்படுகின்ற வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயல்பாட்டிருக்கின்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்கின்றது.

மற்றைய தரப்புகள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது கதைகளை கூறி ஏமாற்றி கடைசியில் மக்களிடம் கைவிரித்து திரும்பவும் என்கின்ற தலைவர்களை நீங்கள் நம்ப போகிறீர்களோ இல்லையோ என்கின்றது தான் இந்த கேள்வி.

இந்தக் கேள்விக்கு எமது மக்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து ஆக வேண்டும் இதில் கொள்கை அளவில் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளும் ஒரு தரப்பையும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிர்கரிக்கின்ற இன்னுமொரு தரப்பையும் சேர சொல்லி கேட்க முடியாது அது சாத்தியமில்லை ஆகவே மக்கள் முடிவெடுக்க வேண்டும் தமிழ் பேச தேசத்தின் உடைய இருப்பை ஒற்றை ஆட்சிக்குள் அதாவது இன்று இருக்கக்கூடிய அரசியல் அமைப்பு வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் ஒரு தீர்வை எட்ட முடியுமா இல்லை என தமிழ் மக்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது அது நடக்கவே நடக்காது ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களினுடைய பிரச்சனைக்கு தீர்க்கப்பட போவதே இல்லை மாறாக அவ்வாறான ஒரு ஒற்றை ஆட்சிக்குள் நாங்களே ஆதரித்தால் அவ்வாறு செயல்பட்டால் நாங்களாகவே எங்களுடைய தேசத்தின் உடைய அழிவுக்கு இணங்குகின்றோம் என்கின்ற ஒரு செய்தியை தான் கொடுப்பதாக இருக்கும் இதுதான் எமது மக்களுக்கு இருக்கக்கூடிய.அந்தக் கட்சிகள் எல்லாரும் உதாரணத்திற்கு தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வு திட்டம் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீர்வு திட்டம் அந்த தீர்வு திட்டத்தை தயாரித்தால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல விக்னேஸ்வரன் அந்த அணிக்குள் இருந்தார் ஈ பி ஆர் எல் ஏ பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருந்தார் தர்மலிங்கம் சித்தார்த்தன் உடைய அதற்குள் இருந்தது இந்த தரப்புகளோடு இணைந்து தான் நாங்கள் அந்த தீர்வு திட்டத்தை தயாரித்தோம்.

அந்த தீர்வு திட்டத்தை தயாரித்ததன் பிற்பாடு எழுத தமிழ் நடைபெறுகின்ற போது டெலோ ஆதரித்தனர் சிவாஜிலிங்கம் போன்றோர் ஆதரித்தனர் ஆனந்த சங்கரியும் கூட எழுக தமிழுக்கு வந்தார் அந்த தமிழ் மக்கள் பேரவை உன்னுடைய தீர்வு திட்டம் இன்று முன்வைத்து அதனை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்லும் தரப்பினர் யார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான்.

மற்றவர்கள் அனைவரும் அதற்குள் இருந்து விட்டு அதிலிருந்து விலகிச் சென்று இன்று 13 ஆம் திருத்தத்தை தான் வலியுறுத்துகின்றனர் நான் உங்களிடம் கேட்கின்றேன் அவர்களுடைய வரலாறு இதுதான் எங்களுக்கு இந்த தரப்புகளோடு வேலை செய்த அனுபவம் இதுதான் இந்த தீர்வு திட்டத்தை நம்பித்தான் மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் எவ்வளவோ அச்சுறுத்தல் இருக்க தக்கதாக யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் வடக்கிலும் கிழக்கிலும் அந்த தீர்ப்பு திட்டத்திற்குத் தான் 2009 மே மாதத்திற்கு பிற்பாடு மக்களும் இந்தளவு தூரத்திற்கு வட தமிழ் தேசத்திலும் தென் தமிழ் தேசத்திலும் திரண்டார்கள்.

அந்த தீர்வுத்திட்டத்தை எவருமே கதைக்க தயார் இல்லை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர இவர்களோடு எவ்வாறு நாங்கள் கொண்டு செல்வது நாங்கள் நம்பி ஏமாற தயார் இல்லை.

எங்களைப் பொறுத்தவரையில் இந்த நேர்மையாக பயணத்தை கொண்டு செல்ல விரும்புகின்ற உண்மையில் அதற்கு நேர்மையாக பயணிக்க தயாராக இருக்கின்ற தரப்புகள் விஷேடமாக தமிழ் சிவில் சமூக மட்டத்திலும் தமிழ் புத்திஜீவிகள் மட்டத்திலும் இந்த கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்ற அவர்களை சேர்த்து நாங்கள் செல்லலாமே தவிர ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும் தங்களுக்கு அரசியல் வழி என்று தேடுவதற்குமாக செயல்படுகின்ற தரப்புகளுக்கு தொடர்ச்சியாக விலை போய் இருக்க முடியாது.

மக்கள் நாளை திரும்ப கேட்பார்கள் நாங்கள் இம்முறை சரியாக செல்வார்கள் என நம்பிக்கையில் சேர்த்து நாளை கடந்த காலங்களில் செய்ததை போன்று திரும்பவும் செய்ய எங்களிடம் கேட்பார்கள் நாங்கள் அந்த இடத்தில் நாங்கள் இல்லை இவர்களோடு பயணிக்க முடியாது என்று சொல்வதை எத்தனை முறை நீங்கள் எங்களிடம் இவ்வாறு சொல்லி சொல்லி திரும்பவும் ஏமாறுகின்றீர்கள் என கேட்பார்கள் அதை நாங்கள் தெரிந்து கொண்டு வந்து செய்ய முடியாது.

அவ்வாறில்லை எங்களைத் தவிர மற்றய தரப்புகள் தேர்தல் காலங்களில் இதைத்தான் கதைக்கின்றார்கள் 13ஆம் திருத்தம் என்கின்ற வார்த்தையை அவர்கள் உச்சரிப்பதில்லை சமஸ்டியை பற்றிய அவர்கள் கூறுகின்றார்கள் எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள் நாங்களும் அதே நிலைப்பாடு தான் இன்று கூட 13 ஆம் திருத்தத்தை நீங்கள் இந்த கேள்வியை கேட்பது சரி நீங்கள் எந்த அடிப்படையில் கேள்விகளை கேட்கின்றீர்கள் என்றால் ஒற்றை ஆட்சிக்குள் தான் அவர்கள் இருக்கின்றார்கள் 13ஆம் திருத்தத்தில் தான் அவர்கள் வலியுறுத்துகின்றார்கள் நீங்கள் மட்டும்தான் இல்லை சமஸ்டி தேவை தமிழ் தேசத்திற்குரிய அங்கீகாரம் தேவை என்ன கூறுகின்றீர்கள் ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள். உண்மை மக்களுக்கும் தேர்தல் நேரத்தில் நாங்கள் கூறுகின்ற கருத்தை அவர்கள் கூறுகின்றார்கள்.

தேர்தல் நேரத்தில் எங்களை குறை சொல்கின்றார்கள் எவ்வாறு என்றால் நாங்களும் அதை நிலைப்பாடில் நாங்களும் சமஷ்டி இவர்கள் தேவையில்லாமல் பிரிந்து நிற்கின்றனர் என்று தான் பிரச்சாரம் செய்கின்றார்கள் இது கடந்த காலங்களில் நடைபெற்றது எதிர்காலத்தில் இந்த விளையாட்டு சரி வராது என்பது தான் நமது கருத்து.

இரண்டாவது எங்களைப் பொறுத்தளவில் இந்த இலக்கை அடைவதன் ஊடாக மாத்திரம் தான் இந்த தேசத்திற்கு விடிவு அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் அந்த இலக்கை நோக்கி பயணிக்காமல் ஒரு தேர்தலை நீங்கள் குறிப்பிட்டது போல நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கின்ற அளவு வெற்றி கிடைக்காத பட்சத்தில் அதை விட்டு செல்வது ஒரு வழியாக இருக்கவே முடியாது.

நாங்கள் அவ்வாறு பார்த்தால் 2009இல் நாங்கள் விலகிச் சென்று இருக்க வேண்டும் 2010, 2015ல் எங்களது தேர்தலில் மக்கள் அங்கீகரிக்கவில்லை அவ்வாறு நாங்கள் விட்டுச் சென்றிருக்க வேண்டும் 2020ல் அங்கீகாரம் கிடைத்தது 2018 இல் உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் இரண்டாவது பெரும் கட்சி 2020ல் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வடகிழக்கில் இரண்டாம் பொருட்காட்சி ஆனால் முதல் இரண்டு தேர்தல்களில் கடைசி இடத்தில் இருந்தோம்.

அந்த தெளிவு ஊடாக எமது அமைப்புக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்தின் வளர்ச்சி இப்பொழுது டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனர் அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் அவர்களை விட கூடுதலான வாக்குகளை நாங்கள் பெறுகின்றோம்.

நாங்கள் எந்த ஒரு சலுகைகளையும் அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்கவில்லை ஆனால் அவர்களை தாண்டி நாங்கள் வளர்கின்றோம். ஏன் ஒரு கட்டத்தில் மக்கள் அந்த தெளிவை விளங்கிக் கொள்கின்றார்கள் அதை நோக்கிய நாங்கள் பயணிக்க வேண்டுமே தவிர சில வேளைகளில் அது தவறும் இல்லாவிட்டால் தேர்தல்களில் அதிக பெரும்பான்மை எடுக்க மாட்டோம் இந்த தேர்தலில் எடுக்காமல் விடுவோம் என்பதற்காக அவ்வாறு நடக்கும் என்று ஒரு நினைப்புக்காக நாங்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலக முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்குரிய ஒரே ஒரு தீர்வு தேர்தல்களை பகிஸ்கரிப்பது மட்டுமே - கஜேந்திரகுமார் தெரிவிப்பு.samugammedia தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய பெயர் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.அனைத்துக் கட்சிகளும் இணங்கினால் தான் ஒரு வேட்பாளராக வர தயார் என்று ஏனையவர்கள் ஒரு வேட்பாளர் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. முக்கியமாக நான் நினைக்கின்றேன் ஈ பி ஆர் எல் எப்   தரப்பின் தலைவர் அந்த அணியை சார்ந்தவர்கள் மற்றும் இன்னுமொரு அணி மனோகணேசன் அவர்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.இந்தப் பின்னணியில் ஊடகங்கள் எம்மிடம் தொடர்ச்சியாக எங்களுடைய நிலைப்பாட்டை கேட்டிருக்கின்ற நிலையில் நாங்கள் இது தொடர்பாக ஒரு சில கருத்துக்களை பகிரங்கப்படுத்த விரும்புகின்றோம்.முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்கள தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அந்த சிங்கள தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்பு கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம் அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம். தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம். இது அனைத்து சம்பந்தமாக அந்த சிங்கள தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது.தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் அனைவரும் ஒற்றைய ஆட்சியை வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலே தொடர்ச்சியாக இருக்கின்றனர். வெளிப்படையாகவே வந்து 13ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதாக இருப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒற்றைய ஆட்சிக்குள் மட்டும் தான் தீர்வு அல்லது இருக்கும் 13 ஆம் திருத்தத்தின் பெயரில் இருக்கின்ற விடயங்களில் கழித்து சொல்லுகின்ற விடயம் மட்டும்தான் இருக்கின்றது.இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் மக்களினுடைய வாக்குகள் இந்த தரப்புக்கு போக முடியாது என்கின்ற ஒரு முடிவில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவு. சிங்கள தரப்பில் இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு இருக்கின்றனர்.அந்த ஒரு பின்னணியில் தான் இன்று இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துகின்ற கதை ஒன்று திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடைய உண்மையான நோக்கத்தினை நான் தெளிவாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அதில் ஒரு சிலர் மிகத் தெளிவாக வெளிப்படையாகவும் கூறி இருக்கின்றனர்.ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் முதல் வட்டத்தில் ஒரு சிங்கள வேட்பாளர் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். இரண்டாம் வாக்கெடுப்பில் வேட்பாளர் தெரிவு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்கள் பேரம் பேசுவதற்கு முன் வருவர். அப்போது நாங்கள் பேரம் பேசி ஒரு தரப்பினை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை எடுக்கலாம்.ஆதரிப்பது தான் அவர்களுடைய நோக்கம். அதனை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று சொல்கின்ற உத்தி இறுதியில் ஒரு சிங்கள தரப்பை நான் இவ்வளவு காலமும் கூறிக் கொண்டு வந்த அனைவரும் எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூறுகள் சம்பந்தமான விடயமாக இருக்கலாம் எங்களுடைய மண் திட்டமிட்டு பறிபோகின்ற நிலைமையை உருவாக்கின தரப்பாக இருக்கலாம் அல்லது ஆதரிக்கின்ற சிறப்பாக இருக்கலாம் அப்படித்தான் இன்று நிலைமை இவை அனைத்தும் சிங்கள வேட்பாளர் யாராக இருந்தாலும் அதுதான் நிலைப்பாடு.அவ்வாறான ஒரு சூழலில் இறுதியில் பேரம் பேசுகின்ற என்ற பெயரில் வந்து இந்த நிலைப்பாட்டில் இருக்கின்ற ஒருவரை ஆதரிப்பது தான் இறுதி முடிவாக இருக்கும் அது முதலாவது.இரண்டாவது விடயம் இந்த தமிழ் தரப்புகள் யார் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கதைக்கின்ற தமிழ் தரப்புகள் யார் இன்று 35 வருடங்களுக்கு மேலாக தோற்றுப்போன ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை வலியுறுத்துபவர்கள் வேறு எதைப் பற்றியும் கதைப்பதற்கு தயாரில்லை என்று கூட பேரம் பேசக்கூடிய சூழல் இருக்க இலங்கை அரசு இன்று உலகத்தில் பணத்திற்கு கெஞ்ச வேண்டிய நிலை ஏன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கெஞ்ச வேண்டி இருக்கின்றது அவ்வாறான ஒரு சூழலிலும் கூட 13 ஆம் திருத்தத்தை வலியுறுத்தி தான் இன்று பேச்சு வார்த்தைகளில் இதுவரைக்கும் ரணில் விக்ரமசிங்கவிடம் பேசுகின்றனர்.அங்கு வேறு எதைப் பற்றியும் கலைக்கவில்லை இவைகளா பேரம் பேசப் போகின்றனர் இந்த தரப்பினை தமிழ் மக்களுக்காக வேட்பாளர்களுடன் உண்மையிலேயே நேர்மையாக வந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இறுதி தீர்வு சம்பந்தமாக பேரம் பேசப் போகின்றார்கள் அப்போது இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் அரசியல்களை முடக்குவதற்கான விலை போய் இருக்கின்ற தமிழ் தரப்புகள் தான் இன்று ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கூறுகின்றனர்.இதையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் கூறுகின்ற தரப்பினரும் படு பிழையான தரப்பு தமிழ் இனத்தினுடைய அரசியல் அவிலாசைகளை ஒற்றை ஆட்சிக்குள் முடக்குகின்ற 13 ஆம் திருத்தத்துக்குள் முடக்குகின்ற திணிக்கின்ற ஒரு தமிழ் தரப்பும் வாக்களிக்க போகின்றோம் என பேசி ஒரு தரப்பினை ஆதரிக்க போகின்ற தரப்பினரை பார்த்தாலும் முற்றுமுழுதாக தமிழர்களுடைய இன அழிப்புக்கு இன்றைக்கும் நியாயப்படுத்தி அதற்கு துணை போகின்ற அல்லாஹ்விடில் அவற்றை செய்விக்கின்ற தரப்பாக தான் இருக்கின்றது.உண்மையிலே சொன்னால் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தேர்வுதான் இருக்கின்றது இந்த தேர்தலை பகிஷ்கரிப்பது நாங்கள் கடந்த 29ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த பகிஷ்கரிப்பு என்கின்ற விடயத்தை ஒவ்வொரு முறையும் அதன் ஊடாக உலகத்திற்கு சொல்லக்கூடிய சிங்கள தேசத்திற்கும் சொல்லக் கூடிய ஒரு தெளிவான செய்தியை வலியுறுத்தியும் துரதிஷ்டவசமாக எங்களுடைய மக்கள் நாங்கள் சொல்கின்ற அந்தக் கருத்தின் உடைய ஆழத்தினை விளங்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் இந்த போலியான கதைகளுக்கு விலை போய் அல்லது ஏமாற்றப்பட்டு எங்களது மக்கள் வாக்குகளை அள்ளி வழங்குகின்றனர்.கடைசியில் முகக்குப் பெற விழுந்ததும் மாத்திரம்தான் மிகுதி முழுவதும் நமது வயிற்றிலே அடித்தனர் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு முறையும் எங்களை ஏமாற்றியுள்ளனர் இனியாவது அனைத்து தரப்பினாலும் ஏமாற்றப்பட்டு இம்முறையும் சென்று யாரையும் நம்பி வாக்களிக்க போவோமாக இருந்தால் ஏமாற்றப்படுவது இரண்டாம் கட்டமாக தான் இருக்கப் போகின்றது.இதுதான் எங்களுடைய முடிவா எங்களுடைய மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு இந்த தேர்தலை பாகிஸ்தரிப்பது மட்டும்தான் எங்களுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு தெரிவு என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.இன்னும் ஒரு விடயம் நாங்கள் ஒரு வேட்பாளரை நிறுத்துவதாயின் அந்த வேட்பாளர் யார் அப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை நிறுத்தப் போகின்றோம் ஆக இருந்தால் இன்றைக்கு அரசியல் அரங்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை மற்றவர் முழு பேரும் தமிழ் மக்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவராகத்தான் இருக்கின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஏமாற்றுகின்ற தலைவராகத்தான் இருக்கின்றனர்.விக்னேஸ்வரனை எடுத்துக் கொண்டால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் ரணில் தான் எங்களை காப்பாற்ற போகின்றார் என பேசிக்கொண்டு இருந்தவர் ரணிலே ஆதரிக்க வேண்டும் என கூறியவர் இன்று ஒரு வேட்பாளராக வருவதற்கு இல்லை இல்லை ரணில் ஏமாற்றி விட்டார் எனக்கு கூறுகின்றார் நாளை மீண்டும் அந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அவர் தயங்க போவதில்லை.2016ல் ஒற்றைய ஆட்சிக்குள்ளே தமிழ் அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடக்கப் போகின்ற என்று சொன்ன விக்னேஸ்வரன் தான் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதற்கு சேர்ந்து அந்த ஒற்றை ஆட்சி திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவைய னால் தயாரிக்கப்பட்ட முழுமையான சமஷ்டி கூறிய தமிழ் தேசத்தை தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சமஸ்டி தீர்வை தயாரித்து அந்த தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டத்தை இறுதி நேரத்தில் கை கூடுவதற்கு தயாராக இருக்கவில்லை.ஆனால் தமிழ் மக்கள் பிறவை உருவாக்குவதற்கு ஒற்றை ஆட்சியை முறியடிக்க வேண்டும் 13ம் திருத்தத்திற்குள் கொண்டு சென்று தமிழ அரசியலை முடக்குவதை முறியடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கினார் இன்று அதே விக்னேஸ்வரன் தான் டெல்லிக்கு கடிதம் எழுதுகின்றார் இந்த 13 ஆம் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று.இவ்வாறான தரப்புகள் தான் தமிழ் மக்களினுடைய வேட்பாளராக வர போகின்றார்கள் என்றால் நீங்கள் நினைக்கின்றீர்களோ தமிழ் மக்கள் அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று அந்த அளவு தூரத்திற்கு எமது மக்கள் முட்டாள்களோ ஆகவே நாங்கள் நிறுத்தப் போகின்ற வேட்பாளர் இன்றைக்கு தமிழ் மக்களால் நம்பக்கூடிய ஒரு வேட்பாளராக இருக்கப் போவதில்லை.அவ்வாறாயின் என்ன செய்தியை கொடுக்கப் போகின்றோம் ஒரு தெளிவான இந்த தேர்தலில் தெளிவான செய்தியை தமிழ் மக்கள் கொடுப்பதற்கு தயார் என்ற மனோ நிலையில் இருக்க தேவையில்லாமல் நிராகரிக்கப்படுகின்ற அல்லது மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக அந்த தெளிவான செய்தியை மறுப்பதற்கு அதனை எவ்வாறாயினும் குழப்புவதற்காக இந்த வேலை திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.திரும்பவும் மக்கள் ஒற்றுமையாக தேர்தலை பகிஷ்கரிக்க கூடிய தெளிவான செய்தியை கொடுக்கக்கூடிய சூழலை எப்படி என்றாலும் குழப்புவதற்காக தான் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது.தமிழ் மக்களினுடைய அரசியல் காட்சிகள் ஒன்று இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கின்ற ஒரு தேவையும் உண்மையில் கிடையாது தேவை எங்கு இருக்கின்றது என்றால் தமிழ் மக்கள் தெளிவாக சரியான தரப்பிற்கு பின்னால் ஒன்றிணைக்க வேண்டும் அதுதான் உண்மையான தேவை.தமிழ் மக்கள் தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத்தினுடைய போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக யார் சரி யார் நேர்மை யார் இல்லை என்று படிப்பதற்கு காலம் கிடைத்து இருக்கின்றது இந்த தரப்புகள் புதிதாக உருவாகின்ற தரப்புகள் அல்ல 15 வருடங்களாக இருந்த அதே தரப்புகள் தான் தொடர்ந்து இருக்கின்றது அதில் யார் சரியாக நேர்மையாக யார் கதைகளை மாற்றாமல் நடந்து கொள்வது அன்றிலிருந்து இன்று வரைக்கும் யார் ஒரே நிலைப்பாடு இருந்து உண்மையை கூறி இன்று அந்த உண்மைகள் நிரூபிக்கப்படுகின்ற வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயல்பாட்டிருக்கின்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்கின்றது.மற்றைய தரப்புகள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது கதைகளை கூறி ஏமாற்றி கடைசியில் மக்களிடம் கைவிரித்து திரும்பவும் என்கின்ற தலைவர்களை நீங்கள் நம்ப போகிறீர்களோ இல்லையோ என்கின்றது தான் இந்த கேள்வி.இந்தக் கேள்விக்கு எமது மக்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து ஆக வேண்டும் இதில் கொள்கை அளவில் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளும் ஒரு தரப்பையும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிர்கரிக்கின்ற இன்னுமொரு தரப்பையும் சேர சொல்லி கேட்க முடியாது அது சாத்தியமில்லை ஆகவே மக்கள் முடிவெடுக்க வேண்டும் தமிழ் பேச தேசத்தின் உடைய இருப்பை ஒற்றை ஆட்சிக்குள் அதாவது இன்று இருக்கக்கூடிய அரசியல் அமைப்பு வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் ஒரு தீர்வை எட்ட முடியுமா இல்லை என தமிழ் மக்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது அது நடக்கவே நடக்காது ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களினுடைய பிரச்சனைக்கு தீர்க்கப்பட போவதே இல்லை மாறாக அவ்வாறான ஒரு ஒற்றை ஆட்சிக்குள் நாங்களே ஆதரித்தால் அவ்வாறு செயல்பட்டால் நாங்களாகவே எங்களுடைய தேசத்தின் உடைய அழிவுக்கு இணங்குகின்றோம் என்கின்ற ஒரு செய்தியை தான் கொடுப்பதாக இருக்கும் இதுதான் எமது மக்களுக்கு இருக்கக்கூடிய.அந்தக் கட்சிகள் எல்லாரும் உதாரணத்திற்கு தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வு திட்டம் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீர்வு திட்டம் அந்த தீர்வு திட்டத்தை தயாரித்தால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல விக்னேஸ்வரன் அந்த அணிக்குள் இருந்தார் ஈ பி ஆர் எல் ஏ பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருந்தார் தர்மலிங்கம் சித்தார்த்தன் உடைய அதற்குள் இருந்தது இந்த தரப்புகளோடு இணைந்து தான் நாங்கள் அந்த தீர்வு திட்டத்தை தயாரித்தோம்.அந்த தீர்வு திட்டத்தை தயாரித்ததன் பிற்பாடு எழுத தமிழ் நடைபெறுகின்ற போது டெலோ ஆதரித்தனர் சிவாஜிலிங்கம் போன்றோர் ஆதரித்தனர் ஆனந்த சங்கரியும் கூட எழுக தமிழுக்கு வந்தார் அந்த தமிழ் மக்கள் பேரவை உன்னுடைய தீர்வு திட்டம் இன்று முன்வைத்து அதனை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்லும் தரப்பினர் யார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான்.மற்றவர்கள் அனைவரும் அதற்குள் இருந்து விட்டு அதிலிருந்து விலகிச் சென்று இன்று 13 ஆம் திருத்தத்தை தான் வலியுறுத்துகின்றனர் நான் உங்களிடம் கேட்கின்றேன் அவர்களுடைய வரலாறு இதுதான் எங்களுக்கு இந்த தரப்புகளோடு வேலை செய்த அனுபவம் இதுதான் இந்த தீர்வு திட்டத்தை நம்பித்தான் மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் எவ்வளவோ அச்சுறுத்தல் இருக்க தக்கதாக யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் வடக்கிலும் கிழக்கிலும் அந்த தீர்ப்பு திட்டத்திற்குத் தான் 2009 மே மாதத்திற்கு பிற்பாடு மக்களும் இந்தளவு தூரத்திற்கு வட தமிழ் தேசத்திலும் தென் தமிழ் தேசத்திலும் திரண்டார்கள்.அந்த தீர்வுத்திட்டத்தை எவருமே கதைக்க தயார் இல்லை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர இவர்களோடு எவ்வாறு நாங்கள் கொண்டு செல்வது நாங்கள் நம்பி ஏமாற தயார் இல்லை.எங்களைப் பொறுத்தவரையில் இந்த நேர்மையாக பயணத்தை கொண்டு செல்ல விரும்புகின்ற உண்மையில் அதற்கு நேர்மையாக பயணிக்க தயாராக இருக்கின்ற தரப்புகள் விஷேடமாக தமிழ் சிவில் சமூக மட்டத்திலும் தமிழ் புத்திஜீவிகள் மட்டத்திலும் இந்த கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்ற அவர்களை சேர்த்து நாங்கள் செல்லலாமே தவிர ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும் தங்களுக்கு அரசியல் வழி என்று தேடுவதற்குமாக செயல்படுகின்ற தரப்புகளுக்கு தொடர்ச்சியாக விலை போய் இருக்க முடியாது.மக்கள் நாளை திரும்ப கேட்பார்கள் நாங்கள் இம்முறை சரியாக செல்வார்கள் என நம்பிக்கையில் சேர்த்து நாளை கடந்த காலங்களில் செய்ததை போன்று திரும்பவும் செய்ய எங்களிடம் கேட்பார்கள் நாங்கள் அந்த இடத்தில் நாங்கள் இல்லை இவர்களோடு பயணிக்க முடியாது என்று சொல்வதை எத்தனை முறை நீங்கள் எங்களிடம் இவ்வாறு சொல்லி சொல்லி திரும்பவும் ஏமாறுகின்றீர்கள் என கேட்பார்கள் அதை நாங்கள் தெரிந்து கொண்டு வந்து செய்ய முடியாது.அவ்வாறில்லை எங்களைத் தவிர மற்றய தரப்புகள் தேர்தல் காலங்களில் இதைத்தான் கதைக்கின்றார்கள் 13ஆம் திருத்தம் என்கின்ற வார்த்தையை அவர்கள் உச்சரிப்பதில்லை சமஸ்டியை பற்றிய அவர்கள் கூறுகின்றார்கள் எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள் நாங்களும் அதே நிலைப்பாடு தான் இன்று கூட 13 ஆம் திருத்தத்தை நீங்கள் இந்த கேள்வியை கேட்பது சரி நீங்கள் எந்த அடிப்படையில் கேள்விகளை கேட்கின்றீர்கள் என்றால் ஒற்றை ஆட்சிக்குள் தான் அவர்கள் இருக்கின்றார்கள் 13ஆம் திருத்தத்தில் தான் அவர்கள் வலியுறுத்துகின்றார்கள் நீங்கள் மட்டும்தான் இல்லை சமஸ்டி தேவை தமிழ் தேசத்திற்குரிய அங்கீகாரம் தேவை என்ன கூறுகின்றீர்கள் ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள். உண்மை மக்களுக்கும் தேர்தல் நேரத்தில் நாங்கள் கூறுகின்ற கருத்தை அவர்கள் கூறுகின்றார்கள்.தேர்தல் நேரத்தில் எங்களை குறை சொல்கின்றார்கள் எவ்வாறு என்றால் நாங்களும் அதை நிலைப்பாடில் நாங்களும் சமஷ்டி இவர்கள் தேவையில்லாமல் பிரிந்து நிற்கின்றனர் என்று தான் பிரச்சாரம் செய்கின்றார்கள் இது கடந்த காலங்களில் நடைபெற்றது எதிர்காலத்தில் இந்த விளையாட்டு சரி வராது என்பது தான் நமது கருத்து.இரண்டாவது எங்களைப் பொறுத்தளவில் இந்த இலக்கை அடைவதன் ஊடாக மாத்திரம் தான் இந்த தேசத்திற்கு விடிவு அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் அந்த இலக்கை நோக்கி பயணிக்காமல் ஒரு தேர்தலை நீங்கள் குறிப்பிட்டது போல நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கின்ற அளவு வெற்றி கிடைக்காத பட்சத்தில் அதை விட்டு செல்வது ஒரு வழியாக இருக்கவே முடியாது.நாங்கள் அவ்வாறு பார்த்தால் 2009இல் நாங்கள் விலகிச் சென்று இருக்க வேண்டும் 2010, 2015ல் எங்களது தேர்தலில் மக்கள் அங்கீகரிக்கவில்லை அவ்வாறு நாங்கள் விட்டுச் சென்றிருக்க வேண்டும் 2020ல் அங்கீகாரம் கிடைத்தது 2018 இல் உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் இரண்டாவது பெரும் கட்சி 2020ல் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வடகிழக்கில் இரண்டாம் பொருட்காட்சி ஆனால் முதல் இரண்டு தேர்தல்களில் கடைசி இடத்தில் இருந்தோம்.அந்த தெளிவு ஊடாக எமது அமைப்புக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்தின் வளர்ச்சி இப்பொழுது டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனர் அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் அவர்களை விட கூடுதலான வாக்குகளை நாங்கள் பெறுகின்றோம்.நாங்கள் எந்த ஒரு சலுகைகளையும் அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்கவில்லை ஆனால் அவர்களை தாண்டி நாங்கள் வளர்கின்றோம். ஏன் ஒரு கட்டத்தில் மக்கள் அந்த தெளிவை விளங்கிக் கொள்கின்றார்கள் அதை நோக்கிய நாங்கள் பயணிக்க வேண்டுமே தவிர சில வேளைகளில் அது தவறும் இல்லாவிட்டால் தேர்தல்களில் அதிக பெரும்பான்மை எடுக்க மாட்டோம் இந்த தேர்தலில் எடுக்காமல் விடுவோம் என்பதற்காக அவ்வாறு நடக்கும் என்று ஒரு நினைப்புக்காக நாங்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலக முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement