• Nov 24 2024

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு எமக்கே- டக்ளஸ் நம்பிக்கை..!

Sharmi / Oct 12th 2024, 1:01 pm
image

மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, புத்தளம் உள்ளடங்களாக இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மேலும் கொழும்பிலும் , புத்தளத்திலும் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து. வந்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டங்களிலும் ஈ.பி.டி.பி. போட்டியிடுகின்றது 

இதேநேரம் ஈ.பி.டி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறி வருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அந்தவகையில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.



எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு எமக்கே- டக்ளஸ் நம்பிக்கை. மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, புத்தளம் உள்ளடங்களாக இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.மேலும் கொழும்பிலும் , புத்தளத்திலும் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து. வந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டங்களிலும் ஈ.பி.டி.பி. போட்டியிடுகின்றது இதேநேரம் ஈ.பி.டி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறி வருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.அந்தவகையில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement