• Oct 17 2024

வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை; பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு! கூறுகின்றது அநுர தரப்பு

Chithra / Oct 16th 2024, 7:52 am
image

Advertisement



அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும், அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல. அவர்களுக்கு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்த விடயங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்  என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்குக்குச்  செல்வதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர். 

அங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைகைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 

தெற்கில் இருந்து வடக்குக்குச் செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன. ஆனால், பாதையைத் தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை. மக்கள் வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர். உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது. ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதாரம் இல்லை. 

முல்லைத்தீவில் வாழும் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

தெற்கில் இருந்து அங்கு சென்று சுற்றுலாவில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது. காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. போர்க் காலத்தில் தமது காணியைக் கைவிட்டு வெளியேறிய மக்கள் போர்  நிறைவடைந்து சென்றபோது அந்தக் காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர். அரசு தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப்  பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

பிரச்சினைகள் அவ்வாறுள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப்ப கிர்வு போன்ற வசனங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் இல்லை. அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன.

எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது. கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன.

இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும்போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

உற்பத்தி பொருளாதாரத்தின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும்போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவற்றுக்குத் தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். - என்றார்.

வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை; பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு கூறுகின்றது அநுர தரப்பு அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும், அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல. அவர்களுக்கு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்த விடயங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்  என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்குக்குச்  செல்வதில்லை.யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர். அங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைகைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். தெற்கில் இருந்து வடக்குக்குச் செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன. ஆனால், பாதையைத் தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை. மக்கள் வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர். உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன் காணப்படுகின்றன.யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது. ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதாரம் இல்லை. முல்லைத்தீவில் வாழும் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.தெற்கில் இருந்து அங்கு சென்று சுற்றுலாவில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது.பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது. காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. போர்க் காலத்தில் தமது காணியைக் கைவிட்டு வெளியேறிய மக்கள் போர்  நிறைவடைந்து சென்றபோது அந்தக் காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர். அரசு தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப்  பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.பிரச்சினைகள் அவ்வாறுள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப்ப கிர்வு போன்ற வசனங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் இல்லை. அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன.எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது. கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன.இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும்போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.உற்பத்தி பொருளாதாரத்தின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும்போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவற்றுக்குத் தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement