• Feb 10 2025

கடைக்குள் புகுந்த பொலிஸாரின் ஜீப் வண்டி...! சின்னாபின்னமான அரிசி மூட்டைகள்...!samugammedia

Sharmi / Dec 16th 2023, 10:04 am
image

புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனம் புத்தளம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

புத்தளம் குட்சைட் வீதியிலிருந்து வருகைத் தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கூட்டுறவு சங்க கடைத் தொகுதி கட்டிடம் உடைந்து சேதமாகியுள்ளதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் மற்றும் பொருட்கள் சேதமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.



கடைக்குள் புகுந்த பொலிஸாரின் ஜீப் வண்டி. சின்னாபின்னமான அரிசி மூட்டைகள்.samugammedia புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனம் புத்தளம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளம் குட்சைட் வீதியிலிருந்து வருகைத் தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில் கூட்டுறவு சங்க கடைத் தொகுதி கட்டிடம் உடைந்து சேதமாகியுள்ளதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் மற்றும் பொருட்கள் சேதமாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement