மட்டக்களப்பு நகரில் போதைபொருளை தேடி நேற்றையதினம் அதிகாலை மோப்ப நாயுடன் பொலிசார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிசார் போதைப்பொருள் வியபாரிகள், கடத்தல் காரர்களை தேடி மோப்ப நாய் சகிதம் கொட்டும் மழைக்கு மத்தியில் நேற்றையதினம்(29) அதிகாலை 2 மணி தொடக்கம் பொலிசாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட வீதி சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில் கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் பயணித்த ஒருவரை கஞ்சாவுடன் கைது செய்துதனர்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, ஆலோசனையில் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே பண்டார வழிகாட்டலில் மட்டு தலமையக பொலிஸ நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்றையதினம் அதிகாலை 2 மணிக்கு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பிற்குள் நுழையும் வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் வீதியில் நிறுத்தி மோப்பநாய் சகிதம் கொட்டும் மழையின் மத்தியில் விடிய விடிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் அதிகாலையில் மோப்ப நாய்களுடன் வீதிக்கு இறங்கிய பொலிஸார். மீட்கப்பட்ட முக்கிய பொருள்.samugammedia மட்டக்களப்பு நகரில் போதைபொருளை தேடி நேற்றையதினம் அதிகாலை மோப்ப நாயுடன் பொலிசார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு தலைமையக பொலிசார் போதைப்பொருள் வியபாரிகள், கடத்தல் காரர்களை தேடி மோப்ப நாய் சகிதம் கொட்டும் மழைக்கு மத்தியில் நேற்றையதினம்(29) அதிகாலை 2 மணி தொடக்கம் பொலிசாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட வீதி சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில் கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் பயணித்த ஒருவரை கஞ்சாவுடன் கைது செய்துதனர். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, ஆலோசனையில் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே பண்டார வழிகாட்டலில் மட்டு தலமையக பொலிஸ நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்றையதினம் அதிகாலை 2 மணிக்கு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பிற்குள் நுழையும் வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் வீதியில் நிறுத்தி மோப்பநாய் சகிதம் கொட்டும் மழையின் மத்தியில் விடிய விடிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.