• May 01 2024

யாழில் மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார்..! வீடொன்று சுற்றிவளைப்பு! – ஆபத்தான பொருட்களுடன் சிக்கிய இரு இளைஞர்கள்

Chithra / Jan 1st 2024, 10:05 pm
image

Advertisement



 

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து தெரியவருவதாவது, 

நீண்ட காலமாக கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50,000 ரூபாய் பணத்துடன் இன்று யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபரின் வீடு கோப்பாய் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது போதைப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டது. 

24 மற்றும் 21 வயதான இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,

கைதானவர்களில் ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் போதைப்பொருள் வியாபாரி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


யாழில் மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார். வீடொன்று சுற்றிவளைப்பு – ஆபத்தான பொருட்களுடன் சிக்கிய இரு இளைஞர்கள்  யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து தெரியவருவதாவது, நீண்ட காலமாக கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50,000 ரூபாய் பணத்துடன் இன்று யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபரின் வீடு கோப்பாய் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது போதைப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டது. 24 மற்றும் 21 வயதான இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,கைதானவர்களில் ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் போதைப்பொருள் வியாபாரி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement