உலக உயிர்களை வாழவைக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை இன்றையதினம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் இன்றையதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, இலங்கையினை பொறுத்த வரையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரிக்கப்பட்ட வட் வரியின் தாக்கம் காரணமாக இம்முறை தைப்பொங்கல் பண்டிகை சோபையிழந்து காணப்படுவதுடன் பொங்கல் வியாபாரமும் இம்முறை எதிர்பார்த்தளவு இடம்பெறவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு நிலையில், நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
மன்னாரில் பொங்கல் கொண்டாட்டம்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும், தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட தைப்பொங்கள் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி மக்கள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
மட்டக்களப்பில் தைப்பொங்கல் நிகழ்வு
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
நாட்டு மக்கள் நோய்நொடியற்று, சமாதானத்துடன் வாழ வேண்டி, மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் அபிடேகங்களும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் தைத்திருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச ரிவிஷாந்த குருக்கள் தலைமையில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காலநிலை ஓரளவு சீரடைந்த பின்னர் இன்று தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இந்து ஆலயங்களிலும் வியாபார நிலையங்களிலும் வீடுகளிலும் இன்று காலை சூரிய பகவானுக்கு நன்றி கடன் செலுத்தும் தைத்திருநாள் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றது.
இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு ஆலயம் அலங்கரிக்கப்பட்டு நெற்கதிர்கள் தொங்கவிடப்பட்டு முதலில் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு முதலில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து கருவறையில் இருக்கும் சித்தி விநாயகர் பெருமாளுக்கு தைத்திருநாள் விசேட வழிபாடுகள் இடம் பெற்றது.
இன்றைய இந்த விசேட வழிபாடுகளில் நகரின் அதிகளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் நல்லாசிகளை பெற்றுக் கொண்டனர்.
சோபையிழந்த பொங்கல் நிகழ்வுகள். அமைதியான முறையில் வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள். samugammedia உலக உயிர்களை வாழவைக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை இன்றையதினம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் இன்றையதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.குறிப்பாக, இலங்கையினை பொறுத்த வரையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரிக்கப்பட்ட வட் வரியின் தாக்கம் காரணமாக இம்முறை தைப்பொங்கல் பண்டிகை சோபையிழந்து காணப்படுவதுடன் பொங்கல் வியாபாரமும் இம்முறை எதிர்பார்த்தளவு இடம்பெறவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இவ்வாறானதொரு நிலையில், நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.மன்னாரில் பொங்கல் கொண்டாட்டம் மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும், தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட தைப்பொங்கள் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி மக்கள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.மட்டக்களப்பில் தைப்பொங்கல் நிகழ்வுகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது.ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.நாட்டு மக்கள் நோய்நொடியற்று, சமாதானத்துடன் வாழ வேண்டி, மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் அபிடேகங்களும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் தைத்திருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச ரிவிஷாந்த குருக்கள் தலைமையில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காலநிலை ஓரளவு சீரடைந்த பின்னர் இன்று தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இந்து ஆலயங்களிலும் வியாபார நிலையங்களிலும் வீடுகளிலும் இன்று காலை சூரிய பகவானுக்கு நன்றி கடன் செலுத்தும் தைத்திருநாள் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றது. இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு ஆலயம் அலங்கரிக்கப்பட்டு நெற்கதிர்கள் தொங்கவிடப்பட்டு முதலில் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு முதலில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து கருவறையில் இருக்கும் சித்தி விநாயகர் பெருமாளுக்கு தைத்திருநாள் விசேட வழிபாடுகள் இடம் பெற்றது. இன்றைய இந்த விசேட வழிபாடுகளில் நகரின் அதிகளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் நல்லாசிகளை பெற்றுக் கொண்டனர்.