• Mar 22 2025

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும்- முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன் பகிரங்கம்

Thansita / Mar 19th 2025, 10:49 pm
image

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைசச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.

ஜனநாயக தமழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தாங்கள் ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும் 

உள்ளூராட்சி  மன்றங்களின் அதிகாரங்கள 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும். 

அதன் மூலமே வடக்கு - கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும்- முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன் பகிரங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைசச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.ஜனநாயக தமழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தாங்கள் ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும் உள்ளூராட்சி  மன்றங்களின் அதிகாரங்கள 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும். அதன் மூலமே வடக்கு - கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now