• Nov 10 2024

உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை! - அனுரவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..!

Chithra / Jan 13th 2024, 11:49 am
image


உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான்  நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. 

மேலதிக மானியம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு  தெளிவில்லாமல் இருப்பது கவலைக்குரியது.

2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில்  ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதியின் செலவினங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை - அனுரவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர். உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான்  நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. மேலதிக மானியம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு  தெளிவில்லாமல் இருப்பது கவலைக்குரியது.2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில்  ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதியின் செலவினங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement